பக்தர்கள் மனநிறைவோடு தரிசனம் செய்ய கோயில்களில் அனைத்து வசதிகளையும் செய்க: அமைச்சர் ரமேஷ் உத்தரவு

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் நேற்று சென்னை நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். உடன் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் ஸ்வர்ணா, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் உள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் நேற்று சென்னை நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். உடன் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் ஸ்வர்ணா, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் உள்ளனர்.

Updated on
1 min read

சென்னை: கோ​யில்​களில் பக்​தர்​கள் முழு மனநிறைவோடு சுவாமி தரிசனம் செய்ய அனைத்து வசதி​களை​யும் உரு​வாக்​கித் தர வேண்​டும் என்று அதி​காரி​களுக்கு இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் ரமேஷ் உத்​தர​விட்​டுள்​ளார்.

இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​ச​ராக ரமேஷ் பொறுப்​பேற்​றுக் கொண்ட பிறகு, சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள ஆணை​யர் அலு​வல​கத்​தில் இந்து சமய அறநிலை​யத் துறை​யின் திட்​டங்​கள், செயல்​பாடு​கள் குறித்து நேற்று ஆய்வு செய்​தார். அறநிலை​யத் துறை செயலர் ஸ்வர்​ணா, ஆணை​யர் பி.என்​.தர், கூடு​தல் ஆணை​யர்​கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்​டனர்.

இந்த ஆய்​வுக் கூட்​டத்​தில் அமைச்​சர் ரமேஷ் பேசி​ய​தாவது: உறு​தி​யான, நம்​பிக்​கை​யான, தூய்​மை​யான நிர்​வாகத்தை வழங்​கு​வ​தாக முதல்​வர் விஜய் உறு​தி​யளித்​துள்​ளார். அதை நாம் முழு​மை​யாகப் பின்​பற்ற வேண்​டும். மற்ற துறை​களை​விட நமது துறை சிறப்​பாக சேவை​யாற்றி வரு​கிறது என்று அனை​வரும் பாராட்​டும் வகை​யில் உயர் அலு​வலர்​கள் முதல் கோயில் கடைநிலை பணி​யாளர்​கள் வரை அனை​வரும் அர்ப்​பணிப்பு உணர்வோடு பணி​யாற்ற வேண்​டும்.

நமது பாரம்​பரி​யம், கலாச்​சா​ரத்தை பாது​காக்​கும் வகை​யிலும், பொது​மக்​கள், பக்​தர்​கள் முழு திருப்​தி​யடை​யும் வகை​யிலும் நமது செயல்​பாடு​கள் அமைய வேண்​டும். கோயில்​களின் நிர்​வாகம் தொடர்​பாக எந்த குறை​பாடும் ஏற்​ப​டாத வகை​யில் நமது செயல்​பாடு​களை அமைத்​துக் கொள்​வதோடு, பக்​தர்​கள் முழு மனநிறைவோடு சுவாமி தரிசனம் செய்ய அனைத்து வசதி​களை​யும் உரு​வாக்​கித் தர வேண்​டும். துறை சார்ந்த எதிர்​காலத் திட்​டங்​கள் குறித்து தொடர்ச்​சி​யாக ஆய்​வுக் கூட்​டங்​கள் நடத்​தப்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

ஆணை​யர் அலு​வல​கத்​தில் உள்ள கட்​டுப்​பாட்டு அறை, ஓலைச்​சுவடி ஆய்வு மையம், ஆன்​மிக புத்தக விற்​பனை நிலை​யம் ஆகிய​வற்​றை​யும்​ அமைச்​சர்​ பார்​வையிட்​டார்​.

<div class="paragraphs"><p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் நேற்று சென்னை நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். உடன் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் ஸ்வர்ணா, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் உள்ளனர்.</p></div>
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கான சதி பாகிஸ்தானில் தீட்டப்பட்டது: 1,597 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in