பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கான சதி பாகிஸ்தானில் தீட்டப்பட்டது: 1,597 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

உள்ளூர் நபர் அடைக்கலம் அளித்ததும் அம்பலம்
பஹல்காம் தாக்குதல் நடந்த பைசரன் பள்ளத்தாக்கு. (கோப்புப் படம்)

பஹல்காம் தாக்குதல் நடந்த பைசரன் பள்ளத்தாக்கு. (கோப்புப் படம்)

Updated on
2 min read

புதுடெல்லி: பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதல் தொடர்​பாக சிறப்பு நீதி​மன்​றத்​தில் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) 1,597 பக்க குற்​றப்​பத்​திரி​கையை தாக்​கல் செய்​துள்ளது. ‘தாக்குதலுக்கான சதி பாகிஸ்தானில் தீட்டப்பட்டது. உள்ளூர் நபர் அடைக்​கலம் அளித்​த​தால், இந்த தாக்​குதல் சாத்​தி​ய​மானது’ என்று அதில் கூறப்​பட்​டுள்​ளது.

காஷ்மீரின் பஹல்​காமில் கடந்​த ஆண்டு ஏப்​ரல் 22-ம் தேதி சுற்​றுலா பயணி​கள் மீது பாகிஸ்தான் தீவிர​வா​தி​கள் துப்​பாக்​கி​யால் சுட்​டனர். இதில் 25 சுற்​றுலா பயணி​களும், உள்​ளூர் நபர் ஒரு​வரும் சுட்​டுக் கொல்​லப்பட்​டனர். தங்களது மதக் கோட்பாடுகளைத் தெரிவிக்​கும் ‘கலி​மா’வை ஓதச் சொல்​லி, பிற மதத்தைச் சேர்ந்த நபர்​களை அடை​யாளம் கண்டு அவர்கள் தாக்​குதல் நடத்​தினர்.

இந்த தாக்​குதலை நடத்​திய தீவிர​வா​தி​கள் ஃபைசல் ஜாட் என்​கிற சுலை​மான் ஷா, ஹபீப் தாஹிர் என்​கிற ஜிப்​ரான் மற்​றும் ஹம்சா ஆப்​கானி ஆகியோரை பாது​காப்பு படை​யினர் கடந்​த ஆண்டு ஜூலை 29-ம் தேதி நடத்​திய ‘ஆபரேஷன் மகாதேவ்’ தேடு​தல் வேட்​டை​யில் சுட்​டுக் கொன்​றனர். இந்த தாக்​குதல் சம்​பவம் குறித்த 1,597 பக்க குற்​றப்​பத்​திரிக்​கையை சிறப்பு நீதி​மன்​றத்​தில் என்ஐஏ தாக்​கல் செய்​தது.

அதில் இந்த தாக்​குதலுக்​கான சதி பாகிஸ்​தானில் தீட்​டப்​பட்​டது எனவும், பஹல்​காமில் உள்ள உள்​ளூர் நபரின் ஆதர​வோடு 3 தீவிர​வா​தி​கள் இந்த தாக்​குதலை நடத்​தி​யதும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் ஹஃபீஸ் சயீத் தலை​மையி​லான லஷ்கர்​ இ தொய்​பா, ஹபிபுல்லா மாலிக் தலை​மையி​லான ‘தி ரெசிஸ்​டன்ஸ் ஃபிரன்ட் (டிஆர்​எப்) ஆகிய அமைப்​பு​களுக்கு தொடர்பு உள்​ள​தாக கூறப்​பட்​டுள்​ளது.

அதன் விவரம்; பஹல்​காம் தாக்​குதலில் ஈடு​பட்ட 3 தீவிர​வா​தி​களும், கடந்​த ஆண்டு ஏப்​ரல் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு பைசரன் அரு​கே​ உள்ள உள்​ளூர்​வாசி பர்​வைஸ் அகமது என்​பவரது குடிசைக்கு துப்​பாக்​கி​களு​டன் வந்​தனர். அவர்​களை பர்​வைஸின் மாமா பஷீர் அகமது ஜோதர் என்​பவர் அறி​முகம் செய்து வைத்​துள்​ளார். பர்​வைஸ் உள்​ளூரில் குதிரை ஓட்​டி​யாக பணி​யாற்​றுகிறார். விருந்​தாளி​களாக வந்​துள்ள 3 பேரும் காஷ்மீர் முஸ்​லிம்​களின் விடு​தலைக்​காக போராடும் ஜிஹா​தி​கள் என பர்​வைஸிடம் அவரது மாமா கூறி​னார். 3 தீவிர​வா​தி​களும் பஞ்​சாபி கலந்த உருது மொழி​யில் பேசினர்.

இதனால் அவர்​கள் காஷ்மீரைச் சேர்ந்​தவர்​கள் அல்ல; முஜாஹிதீன்​கள் என்​பதை பர்​வைஸ் புரிந்து கொண்​டார். தீவிர​வா​தி​கள் தாங்​கள் கொண்டு வந்த துப்​பாக்​கி​களை குடிசைக்​குள் மறைத்து வைத்​தனர். தண்​ணீர், தேநீர்,இரவு உணவு சாப்​பிட்​ட பிறகு, சில ரொட்​டிகளை பார்​சல் செய்து தரும்​படி கேட்​டனர். இதை பர்​வைஸின் மனைவி தாஹிரா தயார் செய்து கொடுத்​தார். இரவு 10 மணி​ அள​வில் 3 பேரும் புறப்​பட்​டனர். மறு​நாள் காலை அவர்​கள் பைசரன் பள்​ளத்​தாக்​குக்கு அரு​கில் காணப்​பட்​டனர். பள்​ளத்​தாக்கு பகுதியில் நுழைவதற்கு முன்​பு, ஒரு மரத்தடி​யில் அமர்ந்து மதிய உணவு சாப்​பிட்​டனர்.

மதி​யம் 2.23 மணி​ அள​வில் தாக்​குதலுக்கு புறப்​பட்​டனர். தங்​கள் பையி​ல் இருந்த போர்​வையை​ போர்த்​திக் கொண்​டனர். அவர்​களில் ஒரு​வர் தனது தலை​யில் ‘கோப்​ரோ' என்ற ஆக்​சன் கேம​ராவை அணிந்​த​படி, பூங்​காவுக்​குள் நுழைந்​தார். ஒரு​வர் தனது எம்-4 கார்​பைன் ரக துப்​பாக்​கி​யால் அங்கு கூடி​யிருந்த சுற்​றுலா பயணி​கள் மீது சுட்​டார். அடுத்த சில நொடிகளில், மற்ற 2 தீவிர​வா​தி​களும் தாபாக்​கள் மற்​றும் சரிவுப் பகு​தி​களில் இருந்து ஏகே-47 ரக துப்​பாக்​கி​கள் மூலம் சுட்​டனர். இதில் 26 பேர் உயி​ரிழந்​தனர். தீவிர​வா​தி​கள் தப்பி ஓடும்​போது, அவர்​களை பிடிக்க பொது​மக்​கள் 3 பேர் முயன்​றனர். அவர்​களை​யும் தீவிர​வா​தி​கள் மிக அரு​கில் வைத்​துச் சுட்​டுக் கொன்​றனர்.

ஒரு​வரை இடைமறித்து ‘கலி​மா' ஓது​மாறு தீவிர​வா​தி​கள் கூறினர். அவர் அதை ஓதி​யதும் அவர்​கள் சுட​வில்​லை.தீவிர​வா​தி​கள் தங்​கள் திட்​டத்தை வெற்​றிகர​மாக நிறைவேற்​றிய மகிழ்ச்​சியை வானில் துப்​பாக்​கி​யால்​ சுட்​டுகொண்​டாடினர்​. இவ்​வாறு குற்​றப் ​பத்​திரி​கையில்​ கூறப்பட்டுள்​ளது.

<div class="paragraphs"><p>பஹல்காம் தாக்குதல் நடந்த பைசரன் பள்ளத்தாக்கு. (கோப்புப் படம்) </p></div>
தமிழகத்தில் காலியாகும் ஒரு இடம் உள்ளிட்ட 26 இடங்களுக்கு ஜூன் 18-ல் மாநிலங்களவைத் தேர்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in