”அமுதம் அங்காடி விவகாரத்தில் துப்பறிவாளன் போல் உதயநிதி செயல்படுகிறார்” - அமைச்சர் ராஜ்மோகன்

அமைச்சர் ராஜ்மோகன்

அமைச்சர் ராஜ்மோகன்

Updated on: 
2 min read

பெரம்பலூர்: “மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக அமுதம் அங்காடி திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அமுதம் அங்காடி விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் துப்பறிவாளன் போல் செயல்படுகிறார்” என அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்துள்ளார்.

பெரம்பலூரில் ரூ.12.83 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 11 புதிய கட்டிடங்களை பொது மக்கள் பயன்பாட்டுக்காக மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி, விளம்பரத் துறை அமைச்சருமான ராஜ்மோகன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஜ்மோகன் கூறுகையில், “மாறிவரும் பொருளாதார சூழ்நிலை மற்றும் வளைகுடா நாடுகளில் கிடைக்கக் கூடிய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சந்தை மதிப்பில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. இதனால் விலைவாசி உயர்ந்துள்ளது. இருப்பினும் மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக அமுதம் அங்காடி திறக்கப்பட்டடு இருக்கிறது.

அமுதம் அங்காடியில் குறைந்த விலையில் 6 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. அரிசி ரூ.30 மற்றும் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து வழங்கவில்லை. அமுதம் அங்காடி விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் துப்பறிவாளன் போல் செயல்படுகிறார்.

மக்கள் வரத்து அதிகம் இருப்பதால் மளிகை பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இனி 15 நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்களை இருப்பு வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பெரம்பலூர் மழை பாதிப்பு குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்படும். பாதிப்புகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மழை பாதிப்பு அனைத்து மாவட்டத்துக்கும் பொதுவானது. சென்னைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது தவறான கருத்து. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி நோடல் அதிகாரிகளை நியமித்து மழை பாதிப்புகளை, கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து கண்காணித்து வருகிறோம். மழை பாதிப்பில் அரசியல் செய்யாமல், மக்கள் நலனில் அனைத்து கட்சியினரும் அக்கறை செலுத்த வேண்டும்.

அரசு பள்ளியில் காலியாக இருக்கும் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்படும். மதிய உணவு இடைவேளைக்கு பின்பு விளையாட்டு வகுப்பு வைத்திருப்பது, மாணவர்களை ஊக்குவிக்கவே. படிப்பில் மன அழுத்தம் இருக்கக் கூடாது. மாணவர்களின் மனநலனை பாதுகாக்க விளையாட்டு, நூலகம், கலை பயிற்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

எந்த பள்ளியிலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை. தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் தமிழ் வளர்ச்சி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும். வார விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார் வருகிறது.

பெற்றோர் வற்புறுத்தல், அதிக தேர்ச்சி விகிதம் காண்பிக்க வேண்டும் என்பதற்காக வார விடுமுறையில் வகுப்புகள் நடத்துவது கண்டிக்கத்தக்கது. இனி வார விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகளில் சாதிய பாகுபாடு இருக்கக் கூடாது. சாதிய பாகுபாட்டுடன் செயல்படும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் யாராக இருந்தாலும் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் போலீஸார் சுதந்திரமாக செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நகராட்சி நிர்வாகத்தில் தவெக அரசியல் செய்ய விரும்பவில்லை. திமுகவினர் அரசியல் செய்யலாம். ஏனென்றால் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லை.

மழை பாதித்த பகுதிகளை கட்சி பாகுபாடின்றி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பெரம்பலூர் தொல்லியல் படிவம் மிகுந்த மாவட்டம். டைனோசர் முட்டை முதல் பல்வேறு புதைபடிவங்கள் கிடைத்திருக்கிறது.

தொல்லியல் புதைபடிவங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். புதைபடிவங்களை பாதுகாக்கவும், பொதுமக்கள் பார்வையிடுவதற்கும் தேவையான அருங்காட்சியம் அமைக்கப்படும். செயல்படாமல் இருக்கும் அருங்காட்சியகங்களும் திறக்கப்படும். அம்மோனைட்ஸ் படிமங்கள் குறித்து விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகும்” என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் ராஜ்மோகன் </p></div>
“நாட்டின் கடன் சுமை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது” - நிர்மலா சீதாராமன் விவரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in