அரசியலுக்கு நடிகர் தனுஷ் வர வாய்ப்பில்லை: அமைச்சர் மரிய வில்சன் கணிப்பு

அரசியலுக்கு நடிகர் தனுஷ் வர வாய்ப்பில்லை: அமைச்சர் மரிய வில்சன் கணிப்பு
Updated on: 
1 min read

சென்னை: வடசென்​னைக்கு உட்​பட்ட ஆர்.கே.நகர் தொகுதி​யில் ஒருங்​கிணைந்த குழந்​தைகள் வளர்ச்சி திட்​டத்​தின் கீழ் புதிய குழந்​தைகள் மையத்​தினை நிதி​யமைச்​சர் மரிய​வில்​சன் நேற்று திறந்து வைத்​தார்.

அப்​போது, அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த 2003-ம் ஆண்டு கால​கட்​டத்​தில் இருந்தே தனுஷை எனக்கு நன்​றாக தெரியும். அவருக்கு திரு​மணம் நடந்​ததில் இருந்து நான் அவருக்கு நெருக்​க​மானவர். தனுஷ் அரசி​யலுக்கு வர வாய்ப்​பு​கள் மிகவும் குறைவு.

தமிழக முதல்​வரின் ஊழல் ஒழிப்பு என்ற ஒற்றை வாசகமே போது​மானது. முதல்​வருக்கு மக்​கள் மத்​தி​யில் கிடைத்​துள்ள வரவேற்பு வேறு யாருக்​கும்கிடைக்​க​வில்லை. இங்கே முதல்​வர் விஜய் என்​பது தான் யதார்த்​தம்.

கடந்த 50 ஆண்​டுகளாக மாறி மாறி ஆண்ட இரண்டு திராவிடக் கட்​சிகளுக்​கும் சேர்த்து, மக்​கள் மிகச் சிறந்த ஒரு பாடத்தை வழங்​கி​யுள்​ளனர்.

இது ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்​டு​மானாலும் அரசி​யல் கட்சி ஆரம்​பிக்​கலாம். யார் வேண்​டு​மானாலும் தேர்​தலில் போட்​டி​யிடலாம். அது முழுக்க முழுக்க அவரவர்​களின் சொந்த முடிவு.

ஏமாற்​றம் தான் மிஞ்​சும்

தனுஷை வைத்து அரசி​யல் களத்​தில் ஒரு திருப்​புமுனையை உரு​வாக்​கலாம் என்று சிலர் நம்​பு​கிறார்​கள். ஆனால், அங்கே திருப்​புமுனை எது​வும் இருக்​காது, ஏமாற்​றம் தான் மிஞ்​சும்.

ரஜி​னிகாந்தை வைத்து பிரச்​சா​ரம் செய்​தால் மக்​கள் அப்​படியே மாறி​விடுவார்​கள் என்று சொல்​வதற்​கெல்​லாம் காலம் தக்க பதிலை கொடுத்​து​விட்​டது. எனவே, யார் பிரச்​சா​ரம் செய்​தா​லும், மக்​கள் ஏற்​கெனவே தங்​களு​டைய தீர்ப்பை முழு​மையாக வழங்​கி​விட்​டனர். இவ்​வாறு அவர் பேசினார்.

அரசியலுக்கு நடிகர் தனுஷ் வர வாய்ப்பில்லை: அமைச்சர் மரிய வில்சன் கணிப்பு
மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் மருத்துவ சிகிச்சை கால அவகாசத்தை நீட்டிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in