தம்பி குடும்பத்தை தாக்கிய வழக்கில் அமைச்சர் மரியவில்சன் இன்று ஆஜராக உத்தரவு

தம்பி குடும்பத்தை தாக்கிய வழக்கில் அமைச்சர் மரியவில்சன் இன்று ஆஜராக உத்தரவு
Updated on
1 min read

புதுச்சேரி: தம்பி குடும்​பத்தை தாக்​கிய​தாக தொடரப்​பட்ட வழக்​கில், குற்​றப்​பத்​திரிகையை பெற தமிழக நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் இன்று புதுச்​சேரி நீதி​மன்​றத்​தில் ஆஜராக உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

புதுச்​சேரி லாஸ்​பேட்டை எழில் நகரில் தமிழக நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் தம்பி மரிய குளோத் வீடு உள்​ளது. அமைச்​சருக்​கும் அவரது தம்​பிக்​கும் இடை​யில் சொத்து பிரச்​சினை இருந்து வந்​தது. கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி மரிய குளோத்​தின் வீடு புகுந்​து, அவரை​யும் அவரது தம்பி மனைவி கேர்​லைன் கிளேட் என்​பவரை​யும் தாக்​கிய​தாக லாஸ்​பேட்டை காவல்​நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. அதன் அடிப்​படை​யில் கொலை முயற்சி உள்​ளிட்ட 6 பிரிவு​களில் வழக்​குப்​ப​தி​வானது. இதுதொடர்​பான வழக்கு புதுச்​சேரி குற்​ற​வியல் நடுவர் மன்றத்தில் நடை​பெற்று வரு​கிறது.

வழக்கு விசா​ரணைக்கு ஆஜரா​காத மரிய வில்​சன், அந்த விசா​ரணையை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். ஆனால், `வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட சம்​பவத்தை நிரூபிப்​ப​தற்​கான ஆதா​ரங்​கள் இருப்​ப​தாகக் கூறி அந்த மனுவை சென்னை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. இதையடுத்​து, அந்​தத் தாக்​குதல் சம்​பவத்​தின் சிசிடிவி காட்​சிகளை சேகரித்​து, நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​குப் பிறகு இதற்​கான குற்​றப்​பத்​திரி​கையை லாஸ்​பேட்டை போலீ​ஸார் தாக்​கல் செய்​தனர் .

இதற்​கிடையே, ஆர்​.கே.நகர் தொகு​தி​யின் தவெக வேட்​பாள​ராக மரிய​வில்​சன் அறிவிக்​கப்​பட்ட நேரத்​தில், உருட்​டுக்​கட்​டை​யுடன் அவர் தம்பி வீட்​டில் தாக்​குதலில் ஈடு​பட்ட வீடியோ சமூகவலைத் தளங்​களில் வைரலானது. இச்​சூழலில் நீதி​மன்ற வாய்​தாவுக்கு அமைச்​சர் மரிய வில்​சன் ஆஜரா​காத நிலை​யில், இவ்​வழக்​கில் அவர் மீது குற்​றப்​பத்​திரிக்கை தாக்​கலானது. அந்த குற்​றப்​பத்​திரி​கையை நீதி​மன்​றத்​தில் ஆஜராகி பெற முதன்மை குற்றவியல் நடுவர் சேரலாதன் உத்​தர​விட்​டுள்​ளார். அதன்​படி இன்று புதுச்​சேரி குற்​ற​வியல் நடு​வர் மன்​றம் எண் 1-ல் கட்​டா​யம் ஆஜராகு​மாறும் அந்த உத்​தர​வில்​ கூறியுள்​ளார்​.

தம்பி குடும்பத்தை தாக்கிய வழக்கில் அமைச்சர் மரியவில்சன் இன்று ஆஜராக உத்தரவு
கோரப்படாத இபிஎஃப் கணக்குகளில் முடங்கிக் கிடக்கும் ரூ.9,330 கோடி: ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in