“அம்பாசமுத்திரத்தில் போட்டியிடுவதாக சீமான் கூறுவது வேடிக்கை...” - அமைச்சர் மரிய வில்சன்

நிதியமைச்சர் மரிய வில்சன்

நிதியமைச்சர் மரிய வில்சன்

Updated on: 
1 min read

நெல்லை: இடைத்தேர்தல் அறிவிப்பு வெளிவராத நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுவதாக சீமான் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று, தமிழக நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற விழாவில் 475 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, ரூ. 64 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை வழங்கிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “திருநெல்வேலிக்கு முதல்வர் விஜய் நிச்சயம் வருவார். தேதி இன்னும் இறுதியாகவில்லை. மதுரை, கோவையைத் தொடர்ந்து எல்லா மாவட்டங்களுக்கும் முதல்வர் செல்கிறார்.

இடைத்தேர்தல் அறிவிப்பு வெளிவராத நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட இருப்பதாக சீமான் அறிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. தவெகவுக்கும், திமுகவுக்கும்தான் போட்டி. மற்றவர்களை போட்டியாளர்களாக நாங்கள் கருதுவதில்லை.

அதிமுக, திமுக கட்சிகளை சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். அதை சீமான் மறந்திருக்கலாம். ஆனால், அந்த கட்சி நிர்வாகிகள் மறந்திருக்க மாட்டார்கள். பசியோடு இருக்கிறேன், பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என்பேனா? என்று சீமான் கூறுகிறார். அவர் நிலைமை அப்படித்தான் இருக்கிறது.

குறைந்த விலையில் அரிசி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். பொருளாதாரத்தை சீரழித்து விட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் எவ்வளவோ மாற்றங்களைச் செய்திருக்கிறோம். ஆனால் அதைப்பற்றி பேசமாட்டார்கள்.

கடந்த ஆட்சியில் மிக மோசமான நிர்வாகம் செய்தார்கள். ஊழல் செய்துள்ளார்கள். பழைய ஆவணங்களை எல்லாம் கண்காணித்து வருகிறோம். ரூ. 10 கோடியில் முடிக்க வேண்டிய திட்டத்துக்கு, ரூ. 15 கோடி வரை அதிகரித்து முறைகேடு செய்துள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>நிதியமைச்சர் மரிய வில்சன்</p></div>
“நிராகரிக்கப்பட்ட 400 மெட்ரிக் டன் வெங்காயம் தற்போது எங்கே?” - தமிழக அரசுக்கு வேல்முருகன் கேள்வி

X