கடந்த ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகள் அனைத்தும் விரைவில் தெரியவரும்: அமைச்சர் மரிய வில்சன்

கும்பகோணம்  தூய அலங்கார அன்னை பேராலயத்தில் வழிபாடு செய்த அமைச்சர் மரிய வில்சன்.

கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் வழிபாடு செய்த அமைச்சர் மரிய வில்சன்.

Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களிடம் கூறியது:

மகாமகம் 2028-ல் நடத்துவது தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் வினோத், தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைப்பார். அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும்.

மாநிலத்தின் வருவாய் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்தது தொடர்பாக வரப் போகின்ற நாட்களில் கசிவுகள் அடைக்கப்படும்.

அந்த லீகேஜ்களை அடைத்தால் நன்றாக இருக்கும். கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் குறித்து, தமிழர் முதல்வர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அவர் முடிவு செய்வார். இது தொடர்பாக அனைத்தும் அனைவருக்கும் விரைவில் தெரியவரும் என்றார். அவருடன் வேளாண் துறை அமைச்சர் வினோத் உடன் இருந்தார்.

முன்னதாக, அமைச்சர்கள் மரிய வில்சன் வினோத் ஆகியோர் கும்பகோணத்தில் உள்ள தூய அலங்கார அன்னை பேராலயத்தில் வழிபாடு செய்து மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

<div class="paragraphs"><p>கும்பகோணம்  தூய அலங்கார அன்னை பேராலயத்தில் வழிபாடு செய்த அமைச்சர் மரிய வில்சன். </p></div>
பனாமாவை வீழ்த்தி இங்கிலாந்தும், போர்ச்சுகலுடன் டிரா செய்து கொலம்பியாவும் முதலிடம் | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in