அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி - முதல்வர் நேரில் நலம் விசாரிப்பு

அமைச்சர் துரைமுருகன் | கோப்புப்படம்

அமைச்சர் துரைமுருகன் | கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டார். அவரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

தமிழக நீர்வளத் துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு வயது மூப்பால் வரும் பிரச்சினைகளுக்காக, அவ்வப்போது மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வீடு திரும்புவது வழக்கம். இதன்படி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நல குறைவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று வீட்டில் தவறி விழுந்ததால் துரைமுருகன் உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்று முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று துரைமுருகனை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். தொடர்ந்து, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போலோ மருத்துவமனை மருத்துவ சேவைகள் இயக்குநர் மருத்துவர் பி.ஜி.அனில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘துரைமுருகன் கால் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவக் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக உள்ளது. கால் வலிக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் சில நாட்களுக்கு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் துரைமுருகன் | கோப்புப்படம்</p></div>
‘ஆட்சியில் பங்கு கிடையாது’ - கறார் காட்டும் ஸ்டாலின்... கலக்கத்தில் காங்கிரஸ்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in