கர்ப்பிணிகள் பிரசவ நாளுக்கு முன்பே அரசு மருத்துவமனைகளில் சேர வேண்டும்: அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்

கர்ப்பிணிகள் பிரசவ நாளுக்கு முன்பே அரசு மருத்துவமனைகளில் சேர வேண்டும்: அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்
Updated on: 
1 min read

சென்னை: தாழ்​வான பகுதி​கள், மலைகிராமங்​களில் வசிக்​கும் கர்ப்பிணிகள் பாது​காப்பு கருதி பிரசவ நாளுக்கு முன்​பாகவே அரசு மருத்​து​வ​மனைகளில் சேர வேண்​டும் என்று சுகாதா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் தெரி​வித்​தார்.

சென்னை மாநக​ராட்சி திரு​விக நகர் மண்​டலத்​துக்​குட்​பட்ட பகுதி​களில் மழைநீர் வெளியேற்​றும் பணிகள், மழைநீர் தேங்​கக்​கூடிய இடங்​களில் மேற்​கொள்​ளப்​பட்​டுள்ள முன்​னெச்​சரிக்கை நட​வடிக்​கைகளை சுகாதா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் நேற்று பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார்.

முன்​னதாக, அமைச்​சர் அருண்​ராஜ் கூறிய​தாவது: அனைத்து அரசு மருத்​து​வ​மனைகள், ஆரம்ப சுகாதார நிலை​யங்​கள், நகர்ப்​புற ஆரம்ப சுகாதார நிலை​யங்​கள் மற்​றும் சுகாதார துணை மையங்​களில் போதிய மருத்​து​வர்​கள், செவி​லியர் மற்​றும் துணை மருத்​துவ பணி​யாளர்​கள் 24 மணி நேர​மும் பணி​யில் இருக்க வேண்​டும்.

வெள்​ளம் பாதித்த பகுதி​களில் மருத்​துவ முகாம்​கள் மற்​றும் நட​மாடும் மருத்​துவ குழுக்​களை ஏற்​பாடு செய்ய வேண்​டும்.

டெங்கு, எலிக் காய்ச்​சல், சிக்​குன்​குனியா, கடுமையான வயிற்​றுப் போக்கு நோய்​கள் மற்​றும் பிற நீர் மூலம் பரவும் தொற்று நோய்​களை ஆரம்ப நிலை​யிலேயே கண்​டறிந்து சிகிச்சை அளிப்​ப​தற்​காக காய்ச்​சல் கண்​காணிப்பு மற்​றும் சிகிச்சை மையங்​கள் வலுப்​படுத்​தப்​பட வேண்​டும்.

பொது​மக்​களும் அரசுக்கு முழு ஒத்​துழைப்பு வழங்க வேண்​டும். தங்​கள் சுற்​றுப்​புறங்​களில் மழைநீர் தேங்​கக்​கூடிய தேவையற்ற பொருட்​களை அப்​புறப்​படுத்த வேண்​டும். வெள்ள நீரில் இறங்கி செல்​லக்​கூடாது.

மழைக்​காலங்​களில் தேவையற்ற பயணங்​களை தவிர்க்க வேண்​டும். குடிநீரை காய்ச்சி ஆரவைத்து பருக வேண்​டும்.

குறிப்​பாக, மழைநீர் தேங்க கூடிய தாழ்​வான பகுதி​கள் மற்​றும் மலைக் கிராம பகுதி​களில் வசிக்​கும் கர்ப்​பிணி தாய்​மார்​கள் தங்​களது பிரசவ நாளுக்கு ஒரு வார காலத்​துக்கு முன்​பாகவே அரசு மருத்​து​வ​மனைகளில் சேர வேண்​டும்.

கர்ப்பிணிகள் பிரசவ நாளுக்கு முன்பே அரசு மருத்துவமனைகளில் சேர வேண்டும்: அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்
சென்னையில் நாளை 2-வது ‘ஏசி’ மின் ரயில் சேவை: சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில் இயங்கும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in