சென்னை, புறநகரில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி: அமைச்சர் ஆனந்த் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை, புறநகரில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி: அமைச்சர் ஆனந்த் இன்று தொடங்கி வைக்கிறார்
Updated on
1 min read

சென்னை: சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் நீர்​நிலைகளை தூர்​வாரி பராமரிக்​கும் பணியை நீர்​வளத்​துறை அமைச்​சர் என்​.ஆனந்த் இன்று தொடங்கி வைக்​கிறார்.

இதுகுறித்து, நீர்​வளத்​துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: சென்​னை​யில் கூவம், அடை​யாறு, கொசஸ்​தலை போன்ற ஆறுகளும், பக்​கிங்​காம் கால்​வாய், ஒக்​கி​யம் மடுவு போன்ற வடி​கால்​களும், வேளச்​சேரி ஏரி, புழல் ஏரி, நாராயணபுரம் ஏரி, ஆதம்​பாக்​கம் ஏரி, கோவிலம்​பாக்​கம் ஏரி போன்ற ஏரி​களும் அடை​யாறு, கூவம் மற்​றும் முட்​டுக்​காடு போன்ற முகத்​து​வாரங்​களும் உள்​ளன.

சென்​னை​யில் 60 கி.மீ நீளத்​துக்கு ஆறுகளும், 54 கி.மீ நீளத்​துக்கு கால்​வாய்​களும் மற்​றும் 3,700 ஹெக்​டேர் பரப்​பளவுக்கு ஏரி​களும் அமைந்​துள்​ளன. இவற்றை முறை​யாக தூர்​வாரி பராமரிக்க வேண்​டியது மிக​வும் அவசி​ய​மாகும்.

எனவே, சென்னை மற்​றும் சுற்​றுப்​புற பகு​தி​களில் உள்ள நீர்​நிலைகளை பெரு நிறு​வனப் பங்​களிப்பு மற்​றும் தன்​னார்​வலர்​களின் பங்​கேற்​புடன் தூர்​வாரி பராமரிக்​கும் பணி​கள் நடை​பெற உள்​ளன. இப்​பணி​களை பரு​வ​மழைக்கு முன்​பாக முடிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

தூர்​வாரும் பணியை நீர்​வளத் துறை அமைச்​சர் என்​.ஆனந்த் இன்று (27-ம் தேதி) களஆய்வு செய்து தொடங்கி வைக்​கிறார். மூன்று நாட்​கள் நடை​பெறும் சிறப்பு ஆய்​வில் மொத்​தம் 6 முக்​கிய இடங்​களில் நீர்​நிலைகளை தூர்​வாரி பராமரிக்​கும் பணி​கள் தொடங்கி வைக்​கப்பட உள்​ளன.

அதன்​படி, இன்று கோயம்​பேடு அரு​கிலுள்ள கூவம் நதிப் பகுதி மற்​றும் ஒக்​கி​யம் மடுவு ஆகிய இடங்​களும், 28-ம் தேதி மணப்​பாக்​கம் அரு​கிலுள்ள அடை​யாறு நதிப் பகுதி மற்​றும் சோழிங்​கநல்​லூர் அக்​கரை பாலம் அரு​கிலுள்ள தெற்கு பக்​கிங்​காம் கால்​வாய் ஆகிய இடங்​கள், 29-ம்

தேதி வேளச்​சேரி ஏரி மற்​றும் நாராயணபுரம் ஏரி ஆகிய இடங்​களில் தூர்​வாரும் பணி​களை ஆய்வு செய்து களப்​பணியை அமைச்​சர் தொடங்கி வைக்​கிறார். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

சென்னை, புறநகரில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி: அமைச்சர் ஆனந்த் இன்று தொடங்கி வைக்கிறார்
பொறியியல் பொதுப் பிரிவு முதல் சுற்று கலந்தாய்வு: 28,550 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in