பொறியியல் பொதுப் பிரிவு முதல் சுற்று கலந்தாய்வு: 28,550 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை

ஜூலை 30-க்குள் கல்லூரியில் சேர அறிவுறுத்தல்
பொறியியல் பொதுப் பிரிவு முதல் சுற்று கலந்தாய்வு: 28,550 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை
Updated on
1 min read

சென்னை: பொறி​யியல் மாணவர் சேர்க்​கை​யில் பொதுப் பிரி​வினருக்​கான முதல் சுற்று கலந்​தாய்​வில் 28,550 மாணவர்​களுக்கு இறுதி ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் அரசு, அரசு உதவி பெறும் பொறி​யியல் கல்​லூரி​கள், அண்ணா பல்​கலைக்​கழக துறை​சார் கல்​லூரி​கள், தனி​யார் சுயநிதி கல்​லூரி​கள் என 440-க்​கும் மேற்​பட்ட பொறி​யியல் கல்​லூரி​கள் உள்​ளன.

இக்​கல்​லூரி​களில் பிஇ, பிடெக் படிப்​பு​களில் அரசு ஒதுக்​கீட்​டுக்கு சுமார் 2 லட்​சம் இடங்​கள் உள்​ளன. இவை ஒற்​றைச் சாளர முறை​யில் பொதுக் கலந்​தாய்வு மூலம் நிரப்​பப்​படு​கின்​றன.

இந்த ஆண்டு பொறியியல் படிப்​பில் அரசு ஒதுக்​கீட்​டில் உள்ள இடங்​களில் சேர 2.45 லட்​சம் மாணவர்​கள் ஆன்​லைனில் விண்​ணப்​பித்​தனர். சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு பிறகு அவர்​களில் 2.36 லட்​சம் பேர் தகுதி பெற்​றனர். அவர்​களது தரவரிசைப் பட்​டியல் ஜூலை 1-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது.

இதைத் தொடர்ந்​து, அரசுப் பள்ளி மாணவர்​களுக்​கான 7.5 சதவீத உள் ​ஒதுக்​கீட்டு பிரி​வில் சிறப்புப் பிரி​வினருக்​கான (மாற்​றுத் திற​னாளி​கள், விளை​யாட்டு வீரர்​கள், முன்​னாள் ராணுவத்​தினரின் குழந்​தைகள்) இணை​ய ​வழி கலந்​தாய்வு கடந்த 13, 14 ஆகிய தேதி​களி​லும், சிறப்பு பிரி​வினருக்​கான பொதுக் கலந்​தாய்வு 15-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை​யும் நடை​பெற்​றது.

இதன்​மூலம் 950 மாணவர்​களுக்கு கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணை​கள் வழங்​கப்​பட்​டன. இதைத் தொடர்ந்​து, பொதுப் பிரி​வினருக்​கான முதல் சுற்று ஆன்​லைன் கலந்​தாய்வு கடந்த 20-ம் தேதி தொடங்​கியது.

இதில், 200 முதல் 171 கட்​-ஆஃப் மதிப்​பெண் பெற்ற மாணவர்​கள், அரசுப் பள்ளி மாணவர்​கள், பொதுப்​பிரிவு மற்​றும் அரசுப் பள்ளி 7.5% ஒதுக்​கீட்​டில் தகு​தி​யுள்ள தொழிற்​கல்வி மாணவர்​கள் கலந்​து​கொண்​டனர்.

முதல் சுற்று கலந்​தாய்​வில் தற்​காலிக​மாக 32,514 பேருக்கு கடந்த 24-ம் தேதி தற்​காலிக ஒதுக்​கீடு வழங்​கப்​பட்​டு, அதை உறு​தி​செய்ய 25-ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் வழங்​கப்​பட்​டது. 28,550 பேர் தற்​காலிக ஒதுக்​கீட்டை உறு​தி​செய்​தனர்.

இந்​நிலை​யில், 28,550 பேருக்​கும் நேற்று காலை 10 மணிக்கு இறுதி ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​பட்​ட​தாக தமிழ்​நாடு பொறி​யியல் மாணவர் சேர்க்கை செயலர் டி.புருஷோத்​தமன் தெரி​வித்​தார்.

இறுதி ஒதுக்​கீட்டு ஆணை பெற்ற மாணவர்​கள் ஜூலை 30-ம் தேதிக்​குள் தங்​களுக்கு ஒதுக்​கீடு செய்​யப்​பட்ட கல்​லூரிக்​குச் சென்று சேர்க்​கைப் பணி​களை முடிக்க வேண்​டும் என்று அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. பொறி​யியல் 2-வது சுற்று கலந்​தாய்வு ஆக.3-ம் தேதி தொடங்​கு​கிறது. கட்​-ஆஃப் மதிப்​பெண் 171 முதல் 135.75 வரை உள்​ளவர்​கள்​ அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர்​.

பொறியியல் பொதுப் பிரிவு முதல் சுற்று கலந்தாய்வு: 28,550 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in