அடுத்த ஆண்டு ஜூலைக்குள் மெட்ரோ ரயில் 2-ம் கட்டம்: பனகல் பூங்கா வரை நீட்டிப்பு

அடுத்த ஆண்டு ஜூலைக்குள் மெட்ரோ ரயில் 2-ம் கட்டம்: பனகல் பூங்கா வரை நீட்டிப்பு
Updated on: 
1 min read

சென்னை: வடபழனி​யில் இருந்து தி.நகர் பனகல் பூங்கா வரை ரயில் சேவையை நீட்​டிக்க மெட்ரோ நிர்​வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: வடபழனி - தி.நகர் பனகல் பூங்கா வரையி​லான பணி​களை முடித்​து, அடுத்த ஆண்டு ஜூலை​யில் ரயில் சேவையை நீட்​டிக்​கத் திட்​ட​மிட்​டுள்​ளோம்.

இரு மார்க்​க​மாக மொத்​தம் 8 கி.மீ தொலைவு கொண்ட இப்​பாதை​யில் கோடம்​பாக்​கம் பவர் ஹவுஸ், கோடம்​பாக்​கம் மற்​றும் பனகல் பூங்கா ஆகிய நிலை​யங்​கள் அமை​கின்​றன.

தற்​போது வரை தலா இரண்​டே​கால் கி.மீ. தொலை​வுக்​குத் தண்​ட​வாளப் பணி​கள் முடிந்​துள்​ளன. மீத​முள்ள பணி​கள் முழு​வீச்​சில் நடக்​கின்​றன. முதற்​கட்​ட​மாக ஆற்​காடு சாலை​யில் பணி​கள் முடிக்​கப்​படும்.

குறிப்​பாக, பனகல் பூங்கா நிலை​யத்​தில் 6 நுழைவு மற்​றும் வெளி​யேறும் பகு​தி​கள் அமைக்​கப்​படு​கின்​றன. இவ்​வாறு அவர்​கள் கூறினர். மாதவரம் - சோழிங்​கநல்​லூர் வரையி​லான 5-வது வழித்​தடத்​தின் ஒரு பகு​தி​யாக, கோயம்​பேடு - ஆலந்​தூர் இடையி​லான மெட்ரோ ரயில் சேவையை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்​தில் பயன்​பாட்​டுக்​குக் கொண்டு வரத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இப்​பாதை​யில் தண்​ட​வாளம் அமைக்​கும் பணி​கள் நிறைவடைந்​துள்ள நிலை​யில், ரயில் நிலை​யங்​களின் நுழைவு மற்​றும் வெளி​யேறும் பகு​தி​கள் அமைக்​கும் பணி​கள் இறு​திக்​கட்​டத்​தில் நடை​பெற்​று வருகின்​றன.

சேவை நேரம் மாற்றம்

பூந்தமல்லி புறவழிச்சாலை – போரூர் சந்திப்பு வழியாக வடபழனி வரையிலான மஞ்சள் வழித்தடத்தில், நாளை (நவ. 24) முதல் காலை நேர மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜூலைக்குள் மெட்ரோ ரயில் 2-ம் கட்டம்: பனகல் பூங்கா வரை நீட்டிப்பு
டாஸ்மாக்கில் ரூ.1,000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனை

X