

சென்னை: டாஸ்மாக் கடைகளில் ரூ.1,000-க்கு மேலான விற்பனை தொகையை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் மட்டுமே பெறும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனைத் தொகை ரொக்க பணம், யுபிஐ மற்றும் கிரெடிட், டெபிட் கார்டு ஆகிய முறைகளில் பெறப்படுகின்றன.
எனினும் விற்பனைத் தொகையின் பெரும்பகுதி ரொக்கமாகவே பெறப்படுகிறது. இதை கையாள்வதில் பணியாளர்களுக்கு பல சிரமங்கள் உள்ளன.
இந்நிலையில், சென்னை மண்டலம், திருவள்ளூர் கிழக்கு மாவட்டங்களில் இன்று முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.