மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

வைகோ | கோப்புப் படம்
வைகோ | கோப்புப் படம்
Updated on
1 min read

திமுக அணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டநிலையில், மதிமுக வேட்பாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று அறிவித்தார்.

அதன்படி, மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன், கடையநல்லூரில் தி.மு.ராஜேந்திரன், மொடக்குறிச்சியில் செந்தில்நாதன், சீர்காழியில் செந்தில்செல்வன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் பூமிநாதன் ஏற்கெனவே மதுரை தெற்கு தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி, அதேபோல மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நாகை தொகுதியில் ஜவாஹிருல்லா, மணப்பாறை தொகுதியில் அப்துல் சமது வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வைகோ | கோப்புப் படம்
திமுக சார்பில் போட்டியிடும் 164 வேட்பாளர்களை அறிவித்தார் ஸ்டாலின் - முழு விவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in