

ஆர்த்தி, அபினேஷ்
பள்ளிக்கரணை: கோவிலம்பாக்கம், பூபதி நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் டாக்டர் கார்த்திக் (35). இவரது வீட்டிலிருந்த சூட்கேஸ், தங்க நகைகள், ரொக்கப்பணம், ஆடைகள் காணாமல் போனது தெரிந்தது.
இதுகுறித்து கார்த்திக் அளித்த புகாரின்பேரில், பள்ளிக்கரணை போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
குடியிருப்பின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆர்த்தி (19), சூட்கேஸ் மற்றும் பைகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
ஆர்த்தியைக் கைதுசெய்து விசாரித்ததில், அவரது காதலன் அபினேஷுடன் (22) சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரிந்ததால் அபினேஷையும் போலீஸார் கைது செய்தனர்.
இருவரிடமிருந்தும் 10 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம், ஆடைகள் மீட்கப்பட்டன. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.