ஒரே நேரத்தில் 2,000 பயணிகளை கையாளும் விதமாக மதுரை சர்வதேச விமான நிலைய முனையம் விரிவாக்கம்

பயணிகளுக்கான வசதியை மேம்படுத்த நிர்வாகம் நடவடிக்கை
மதுரை விமான நிலைய தற்போதைய  முகப்பு தோற்றம்.

மதுரை விமான நிலைய தற்போதைய முகப்பு தோற்றம்.

Updated on
2 min read

மதுரை: ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பயணிகளை கையாளும் விதமாக, மதுரை விமான நிலைய முனையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத் போன்ற உள்நாட்டு நகரங்களுக்கு தினசரி விமான சேவையும், சர்வதேச அளவில் தற்போது லங்கன் ஏர்லைன்ஸ் தினசரி சேவையும் உள்ளது.

மதுரை ​விமான சேவையை பொருத்தவரையில் 2023- 2024 நிதி ஆண்டில் 12 ஆயிரத்து 72, 2024- 2025-ல் 13 ஆயிரத்து 824, 2025- 2026 மே மாதம் வரை 13 ஆயிரத்து 105 விமான சேவைகளும் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருவனந்தபுரம், திருச்சி விமான நிலைய எல்லைகளில் மோசமான வானிலை நிலவினால், அவசர அடிப்படையில் மதுரைக்கு விமானத்தை திருப்பிவிட்டு பாதுகாப்பாக தரையிறக்கும் வசதிகளும் உள்ளன.

மேலும், சில நேரத்தில் தவிர்க்க முடியாத சூழலில் பாதுகாப்பு படையினருக்கான விமானங்களும் இரவு நேரத்தில் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்துகின்றன. 2024 அக்டோபர் முதல் இரவு நேர விமான சேவையும் நடை முறையில் உள்ளது. இரவு நேரத் தில் விமானங்களை நிறுத்தி வைக்கவும், 3 ஏரோ பிரிட்ஜ்கள், 2 ஹெலிகாப்டர்களுக்கான தனி நிறுத்துமிடமும் உள்ளன.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் பயணி களுக்கான பல்வேறு வசதி களை மேம்படுத்தும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான பணி ஓரிரு ஆண்டு களாக நடந்து வருகிறது.

ஓடுபாதை விரிவாக்கப் பணியை பொருத்தவரை 3.1 கி.மீ. பணி நிறைவடைந்த நிலையில். நெடுஞ்சாலைத் துறையினரால் பேருந்து போக்குவரத்துக்கான மாற்றுச் சாலை அமைக்கத் தேவையான இடங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்விமான நிலையத்தில் சரக்கு சேவையை எளிதில் கையாளும் வசதியும் மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு வசதி களை மேம்படுத்தும் நிலை யில் விமான நிலைய முனைய மும் (டெர்மினல்) விரி வாக்கம் செய்யப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரை விமான நிலையத்தை பயன்படுத்துவோரின் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சர்வதேச விமான நிலையமாக மாறியதால் அதற் கான வசதிகளை மேம்படுத்த விமான நிலைய முனையத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விரி வாக்கப் பணிக்கான ஆலோ சகரை நியமிக்க ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருக்கும் 17,600 சதுர மீட்டர் (சுமார் 1,89,000 சதுர அடி) பரப்பளவை காட்டிலும் கூடுதலாக 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு சேர்க்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் 1,280 உள்நாட்டு பயணிகளும், 720 சர்வதேச பயணிகள் என 2 ஆயிரம் பயணிகளை கையாளும் வசதி ஏற் படுத்தப்படும். கூடுதலாக ஒரு விமான நிறுத்துமிடமும் அமைக்கப்படுகிறது. புதிய ஏரோ- பிரிட்ஜ் (Aero bridge) நிறுவப்படும். 2 புதிய பேக்கேஜ் கரோசல்கள் (Baggage Carousels) அமைக்கப்படுகிறது.

பயணிகளின் உடைமைகளை விரைவாக வழங்கும் வசதி யும் மேம்படுத்தப்படும். இப்பணிக்கான ஒப்பந்த அறிவிப்புக்கு முன்னதாக சுற்றுச்சூழல் துறையில் தடையில்லா சான்றிதழ்களை பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட் டுள்ளது.

இதற்காக மாசு கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகளை அணுகி உள்ளோம். தடை யில்லா சான்றிதழ்கள் கிடைத்த பிறகு கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தம் உள்ளிட்ட அடுத்தடுத்த பணிகளும் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>மதுரை விமான நிலைய தற்போதைய  முகப்பு தோற்றம்.</p></div>
‘காவல் மரணம், விலைவாசி, மின்கட்டண உயர்வு’ - தவெக அரசுக்கு பிரேமலதா கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in