ஆளுநர் மாளிகை முற்றுகை: மாதர் அமைப்பினர் கைது

ஆளுநர் மாளிகை முற்றுகை: மாதர் அமைப்பினர் கைது
Updated on
1 min read

சென்னை: மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்​கீடு வழங்​கும் மசோ​தா​வில் தொகுதி மறு​வரையறை, மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு போன்ற நிபந்​தனை​களைச் சேர்க்​காமல் நடப்பு நாடாளு​மன்ற கூட்​டத் தொடரிலேயே சட்​ட​மாக்கி அமல்​படுத்​தக்​கோரி, மகளிர் இட ஒதுக்​கீட்​டுக்​கான தேசிய பெண்​கள் கூட்​டமைப்பு மற்​றும் அனைத்து பெண்​கள் கூட்​டமைப்பு சார்பில், ஆளுநர் மாளிகை முற்​றுகை​யிடும் போராட்​டம் நேற்று நடைபெற்றது.

அனைத்​திந்​திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்​திய துணைத் தலை​வர் உ.வாசுகி தலை​மை​யில், 300-க்​கும் மேற்​பட்ட பெண்கள் சின்​னமலை​யில் இருந்து ஆளுநர் மாளி​கையை முற்​றுகை​யிட ஊர்​வல​மாக புறப்​பட்​டுச் சென்​றனர். ஆனால், தடையை மீறி அவர்​கள் செல்ல முற்​பட்​ட​தால் போலீ​ஸார் அவர்​களை கைது செய்​தனர்.

இதில் அனைத்​திந்​திய ஜனநாயக மாதர் சங்​கத்தின் மாநிலத் தலை​வர் ஜி.பிரமிளா, இந்​திய மாதர் தேசிய சம்​மேளனத்​தின் மாநிலத் தலைவர் மஞ்சுளா, தேசியச் செயலாளர் ஏ.ஆர்.சாந்தி, அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்கத்தின் தலைவர் பங்​கேற்​றனர்​.

ஆளுநர் மாளிகை முற்றுகை: மாதர் அமைப்பினர் கைது
தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் இதுவரை 183 கோயில்களில் கும்பாபிஷேகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in