மோசடி பேர்வழிகளுக்கு சி.மகேந்திரன் ஆதரவாக செயல்பட்டார்: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விளக்கம்

மோசடி பேர்வழிகளுக்கு சி.மகேந்திரன் ஆதரவாக செயல்பட்டார்: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விளக்கம்
Updated on
1 min read

சென்னை: தவெக​வில் இணைந்த இந்​திய கம்​யூனிஸ்ட் மூத்த தலை​வர் சி.மகேந்​திரன், மோசடி பேர்​வழிகளுக்கு ஆதர​வாக செயல்​பட்​ட​வர் என கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தெரி​வித்​துள்​ளார்.

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர்​களில் ஒரு​வ​ரான சி.மகேந்​திரன், நேற்று முன்​தினம் தவெக​வில் இணைந்​தார். இந்​நிலை​யில் சி.மகேந்​திரன், ஏற்​கெனவே கட்​சி​யின் ஒழுங்கு நடவடிக்​கைக்கு உள்​ளாக்​கப்​பட்​ட​வர் என்​று, மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் விளக்​கம் அளித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யில் மூத்த உறுப்​பின​ரான சி.மகேந்​திரன் கட்சி அமைப்​பு​களில் பல்​வேறு நிலைகளில் பொறுப்பு வகித்​தவர். சமீப​கால​மாக கட்​சி​யின் அமைப்பு விதி​களுக்கு விரோத​மாக​வும், கட்​சி​யின் கோட்​பாட்டு நெறி​முறை​களுக்கு எதி​ராக​வும் செயல்​பட்​ட​தால் கட்​சி​யின் ஒழுங்கு நடவடிக்​கைக்கு உள்​ளாக்​கப்​பட்​டார்.

குறிப்​பாக, கட்​சி​யின் ஆரம்​ப​கால தலை​வர்​களால் உரு​வாக்​கப்​பட்ட, இன்று தமிழகத்​தில் மிகச்​சிறந்த மதிப்​புமிக்க பதிப்​பக​மாக வளர்ந்​துள்ள நிறு​வனத்தை குறுக்கு வழி​யில் சிலர் கையகப்​படுத்​து​வதற்கு மோசடி​யான ஆவணங்​களைத் தயார் செய்​திருந்​திருந்​தனர்.

அத்​தகைய மோசடி பேர்​வழிகளுக்கு ஆதர​வாக சி.மகேந்​திரன் செயல்​பட்​டார். எனவே, சி.மகேந்​திரன் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்​தது. அவரும் கட்​சி​யுடன் எவ்​வித தொடர்​பும் இல்​லாமல் இருந்​து​வந்​தார்.

அவர், தனது தவறுகளை திருத்​திக்​கொண்டு கட்​சி​யுடன் தன்னை பொருத்​திக்​கொள்ள கொடுத்த வாய்ப்​பைப் பயன்​படுத்திக் கொள்​ளாமல் தற்​போது, தமிழக வெற்​றிக் கழகத்​தில் சேர்ந்​து​விட்​டார்.

சி.மகேந்​திரனின் இந்த நடவடிக்​கை​யின் மூலம் அவர் மீது கட்சி எடுத்த நடவடிக்கை மிகச் சரி​யானது என்​பது உறு​திப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

மோசடி பேர்வழிகளுக்கு சி.மகேந்திரன் ஆதரவாக செயல்பட்டார்: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விளக்கம்
சென்னையில் மாநகராட்சி சார்பில் 55 பள்ளிகளில் குளிர் கூரை அமைக்க நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in