தூய்மை பணி​யாளருக்​கான காலை உணவில் பல்லி இருந்ததால் அதிர்ச்சி: ஆவடியில் 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம்

தூய்மை பணி​யாளருக்​கான காலை உணவில் பல்லி இருந்ததால் அதிர்ச்சி: ஆவடியில் 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம்
Updated on
1 min read

ஆவடி: ஆவடி மாநக​ராட்​சி​யில் தூய்மை பணி​யாளர்​களுக்கு வழங்​கப்​பட்ட காலை உணவில் பல்லி இருந்த நிலை​யில், உணவை உட்​கொண்ட 40-க்​கும் மேற்​பட்​டோருக்கு வாந்​தி, மயக்​கம் ஏற்​பட்ட சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது.

ஆவடி மாநக​ராட்​சி​யில் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தூய்மை பணி​யாளர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். இவர்​களுக்கு அரசு சார்​பில் தின​மும் காலை 8 மணிக்கு காலை உணவு வழங்​கப்​படு​கிறது.

ஐதரா​பாத்தை சேர்ந்த தனி​யார் ஒப்​பந்​தா​ரர் ஆவடி சின்​னம்​மன் கோயில் அரு​கில் சமையல் கூடம் அமைத்து உணவு தயாரித்து அனுப்பி வைக்​கிறார். இந்​நிலை​யில் நேற்று காலை​யில் வழக்​கம்​போல் துய்மை பணி​யாளர்​கள் காலை உணவு உண்​டனர்.

அப்​போது 48- வது வார்​டில் உள்ள ஊழியர்​கள், சாம்​பாரில் பல்லி இருந்​ததை கண்டு அதிர்ச்சி அடைந்​தனர். இதனால் சிறிது நேரத்​தில் அவர்​களுக்கு வாந்​தி, மயக்​கம் ஏற்​பட்​டது. உடனே ஆவடி அரசு மருத்​து​வ​மனை​யில் பலர் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

40-க்​கும் மேற்​பட்​டோருக்கு வாந்​தி, மயக்​கம் ஏற்​பட்ட நிலை​யில் பலரது உடல்​நிலை சிறிது நேரத்​தில் சீரானது. 4 பேருக்கு மட்​டும் உடல்​நிலை பெரிய அளவில் பாதிக்​கப்​பட்டு டிரிப்ஸ் ஏற்​றப்​பட்​டது.

இத்​தகவல் அனைத்து ஊழியர்​களுக்​கும் பரவிய​தால் ஏராள​மான தூய்மை பணி​யாளர்​கள் விரைந்து வந்து மருத்​து​வ​மனை​யில் முதுலுதவி சிகிச்சை பெற்​றனர்.

இது குறித்து ஆவடி மாநக​ராட்சி அதி​காரி​கள் கூறிய​தாவது: உணவு பாது​காப்பு துறை மூலம் 21 இடங்​களில் வழங்​கப்​பட்ட உணவு மாதிரி​களை ஆய்​வுக்கு உட்​படுத்தி உள்​ளோம்.

மாநக​ராட்சி அங்​கீகரிக்​கப்​பட்ட உணவு தயாரிக்​கும் நிறு​வனத்​தின் மூலம் உணவு வழங்​கப்​பட்டு வரு​கிறது. உணவு மாதிரி​கள் ஆய்​வுக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளன. தவறு கண்​டறிந்​தால் அந்த நிறு​வனம் மீது உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என்றனர்.

தூய்மை பணி​யாளருக்​கான காலை உணவில் பல்லி இருந்ததால் அதிர்ச்சி: ஆவடியில் 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம்
எம்ஆர்பி விலைக்கு மட்டுமே மது விற்பனை: டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in