சென்னை மாநகராட்சி சார்பில் 64,586 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்

சென்னை மாநகராட்சி சார்பில் 64,586 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்
Updated on
1 min read

சென்னை: ​மாநகராட்சி சார்​பில் 64,586 செல்​லப்​பி​ராணி​களுக்கு உரிமம் வழங்​கப்​பட்​டுள்​ளன. இதுதொடர்​பாக, சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்சி சார்​பில், தெரு​நாய்​கள் மற்​றும் செல்​லப் ​பி​ராணி​களுக்கு (நாய், பூனை) மைக்​ரோசிப் செலுத்​துதல், வெறி​நாய்க்​கடி நோய்த்​தடுப்​பூசி செலுத்​துதல் உள்​ளிட்ட ஒருங்​கிணைந்த மேலாண்​மைக்​காக மேம்​படுத்​தப்​பட்ட இணை​யதள சேவை கடந்த ஆண்டு அக்​டோபர் மாதம் தொடங்​கப்​பட்​டது.

இந்த இணை​யதள சேவை, செல்​லப் பிராணி​கள் மற்​றும் தெரு​நாய்​களின் தடுப்​பூசி விவரங்​கள், அடுத்த தவணை தடுப்​பூசி செலுத்த வேண்​டிய தேதி​களை திறம்பட கண்​காணிக்க உதவு​கிறது.

செல்​லப்​பி​ராணி​களுக்கு ஆண்​டு​தோறும் வெறி​நாய்க்​கடிநோய்த் தடுப்​பூசி செலுத்​தப்​பட்​டுள்​ளதை உறு​திப்​படுத்​த​வும், இந்த தடுப்​பூசி செலுத்​தப்​பட்ட நாள் முதல் ஓராண்டு காலத்​துக்கு மட்​டும் உரிமம் செல்​லத்​தக்​கது என்​பதை உறு​திப்​படுத்தி மீண்​டும் உரிமம் புதுப்​பிக்​கப்​படு​வதை உறுதி செய்​ய​வும், செல்​லப்​பி​ராணி​கள் கைவிடப்​படு​வதை தடுப்​ப​தற்​காக​வும் செல்​லப்​பி​ராணி​களுக்கு மைக்ரோ சிப் செலுத்தி உரிமம் பெறு​வது மாநக​ராட்​சி​யில் கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த மைக்ரோ சிப்​பில் செல்​லப்​பி​ராணி​களின் உரிமை​யாளரின் பெயர், முகவரி உள்​ளிட்ட தரவு​கள் பதிவு செய்​யப்​படும். இணை​யதளத்​தில் இது​வரை 1,26,781 செல்​லப்​பி​ராணி​கள் விவரங்​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன.

அதில் உரிமம் கோரி 1,15,119 செல்​லப் பிராணி​களின் உரிமை​யாளர்​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர். அவற்​றில் 74,740 செல்​லப்​பி​ராணி​களுக்கு மைக்ரோ சிப் பொருத்​தப்​பட்​டுள்​ளன. தற்​போதைய நில​வரப்​படி 64,586 செல்​லப்​பி​ராணி​களுக்கு ரேபிஸ் தடுப்​பூசி போடப்​பட்​டுள்​ளன.

மைக்ரோ சிப், பொருத்​தி, தடுப்​பூசி​யும் செலுத்​திக்​கொண்ட செல்​லப்​பி​ராணி​களுக்கு மட்​டுமே உரிமம் வழங்​கப்​படும் என்ற விதி இருப்​ப​தால், தற்​போது வரை 64,586 செல்​லப்​பி​ராணி​களுக்கு உரிமம் வழங்​கப்​பட்​டுள்​ளன.

எனவே, செல்​லப் ​பி​ராணி​களுக்கு மைக்ரோ சிப் பொருத்​த​வும், தடுப்​பூசி செலுத்​திக் ​கொள்​ள​வும், உரிமத்தை புதுப்​பித்​துக் ​கொள்​ள​வும் மாநக​ராட்​சி​யின் திரு.​வி.க.நகர், புளியந்​தோப்​பு, லாயிட்ஸ் காலனி, நுங்​கம்​பாக்​கம், கண்​ணம்​மாபேட்​டை, மீனம்​பாக்​கம் ஆகிய இடங்​களில் உள்ள செல்​லப்​பி​ராணி மருத்​து​வ​மனை​களில் இலவச​மாக சேவையை பெறலாம். இவ்​வாறு செய்​திக் ​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் 64,586 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ.38.50 லட்சம் மோசடி முயற்சி: மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in