குரூப்-1 தேர்வு காலியிடங்களை 200 ஆக அதிகரிக்க முதல்வருக்கு கடிதம்

குரூப்-1 தேர்வு காலியிடங்களை 200 ஆக அதிகரிக்க முதல்வருக்கு கடிதம்
Updated on
1 min read

சென்னை: குரூப்-1 தேர்​வுக்​கான காலிப்​பணி​யிடங்​களை 200 ஆக அதி​கரிக்க வேண்​டும் என இந்​திய கம்​யூனிஸ்ட் அனைத்​திந்​திய இளைஞர் பெரு​மன்​றம் மாநிலத் தலை​வர் இரா.தமிழ்​பெரு​மாள், முதல்​வர் விஜய்க்கு எழுதிய கடிதத்தில் ஏழை, எளிய இளைஞர்​களுக்​குத் தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) நடத்​தும் போட்​டித் தேர்வு பெரும் நம்​பிக்​கை​யாக இருந்து வரு​கிறது.

ஆண்​டு​தோறும் லட்​சக்​கணக்​கான இளைஞர்​கள் பல்​வேறு பொருளா​தார நெருக்​கடிகளை எதிர்​கொண்டு தேர்வு எழுதுகின்​றனர்.

இதில் துணை ஆட்​சி​யர், உதவி ஆணை​யர், மாவட்ட பதி​வாளர் உள்​ளிட்ட பணி​யிடங்​களை நிரப்ப நடத்​தப்​படும் நடப்​பாண்டு குரூப்-1 தேர்​வுக்கு கடந்த காலங்​களைக் காட்​டிலும் மிக​வும் குறை​வாக 26 காலிப்​பணி​யிடங்​கள் மட்​டுமே அறிவிக்​கப்​பட்​டிருப்​பது அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

‘இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பை உரு​வாக்​கக்​கூடிய அரசாக தவெக செயல்​படும், காலிப்​பணி​யிடங்​களை முழு​மையாக நிரப்​புவோம்’ என்ற வாக்​குறு​திக்கு இது நேர்​மாறானது.

எனவே தமிழக அரசு குரூப்-1 காலிப்​பணி​யிடங்​களை 200 ஆக அதி​கரித்து தேர்வை நடத்த டிஎன்​பிஎஸ்​சி-க்கு உத்​தர​விட அவர்​கள்​ வலி​யுறுத்​தி​யுள்​ளனர்​.

குரூப்-1 தேர்வு காலியிடங்களை 200 ஆக அதிகரிக்க முதல்வருக்கு கடிதம்
சவுகார்பேட்டையில் கடைக்குள் புகுந்து 1.5 கிலோ தங்கம் கொள்ளை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in