

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கண்ணாமூச்சி பகுதியில் கடந்த 3 மாதங்களாக கால்நடைகளை வேட்டையாடி வந்த 6 வயது ஆண் சிறுத்தை, மிளகாய்பொதை பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது. இதுவரை சுமார் 20 ஆடுகள், 2 மாட்டுக் கன்றுகள், 3 வளர்ப்பு நாய்கள், 15 கோழிகளை வேட்டையாடி கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தைக்கு 6 வயது இருக்கும். உரிய அனுமதிக்குப் பிறகு வனப்பகுதியில் இந்த சிறுத்தை விடுவிக்கப்படும்.