தூத்துக்குடி மளிகை கடையில் தீ: ரூ.2 கோடி பொருட்கள் எரிந்து சேதம்

தூத்துக்குடி மளிகை கடையில் தீ: ரூ.2 கோடி பொருட்கள் எரிந்து சேதம்
Updated on: 
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாலு மகன் குருசாமி (45). இவர் மீனாட்சிபுரம் பிரதான சாலையில் பலசரக்கு பொருட்கள் மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார். கடையை ஒட்டி பின்புறம் 2 குடோன்களும் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு 12.40 மணியளவில் கடை மற்றும் குடோன் தீப்பற்றி எரிந்தது. அங்கு இருந்த சுமார் ரூ.2 கோடி மளிகைப் பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.

தூத்துக்குடி மளிகை கடையில் தீ: ரூ.2 கோடி பொருட்கள் எரிந்து சேதம்
மத மாற்றத்தில் ஈடுபடும் அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற அனுமதிக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in