டெல்லியில் இடதுசாரி தலைவர்கள் கைது: தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

மாநிலச் செயலாளர்கள் கூட்டறிக்கை
டெல்லியில் இடதுசாரி தலைவர்கள் கைது: தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு
Updated on: 
1 min read

சென்னை: டெல்​லி​யில் இடது​சாரி கட்​சித் தலை​வர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில், தமிழகம் முழு​வதும் இடது​சா​ரி​கள் கட்சி சார்​பில் மாவட்ட தலைநகரங்​களில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடத்த அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக இடது​சாரி கட்​சிகளின் மாநிலச் செய​லா​ளர்​கள் பெ.சண்​முகம் (சிபிஎம்), மு.வீர​பாண்​டியன் (சிபிஐ), பழ.ஆசைத் தம்பி (சிபிஎம்​-எல்) ஆகியோர் வெளி​யிட்ட கூட்​டறிக்​கை​: தலைமைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மாரை பதவி நீக்​கம் செய்​யக் கோரி, டெல்​லி​யில் கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்​தர் மந்​தரில் போராட்​டத்​துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்​தது. இந்த போராட்​டத்​துக்கு இடது​சாரி கட்சிகளும், வெகுஜன அமைப்​பு​களும் ஆதரவை தெரி​வித்து இருந்தன. இந்​நிலை​யில் ஜந்​தர்​மந்​தர் பகு​தி​யில் மத்​திய அரசின் டெல்லி போலீ​ஸார் மற்​றும் துணை ராணுவப் படை​யினர் கடுமையான அடக்​கு​முறை​களை ஏவி விட்​டுள்​ளனர்.

போராட்​டக்​காரர்​களை ஒன்​றுசேர விடா​மல் ஆங்​காங்கே கைது செய்​துள்​ளனர். டெல்​லிக்​கான 254 ரயில்​கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 54 மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் மூடப்பட்டுள்​ளன. 35 ஆயிரம் காவல்​படை​யினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமை​தி​யான முறை​யில் போராட்​டம் நடத்த உரிமை உண்டு என்ற உச்ச நீதி​மன்​றத்​தின் அறி​வுரை செவிமடுக்​கப்​பட​வில்​லை. மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி பொதுச் செய​லா​ளர் எம்​.ஏ.பேபி, இந்​தி​யக் கம்​யூனிஸ்ட் கட்சி பொதுச் செய​லா​ளர் டி.​ராஜா உள்​ளிட்ட தலை​வர்​களும் கைதாகி உள்​ளனர்.

ஜனநாயக மறுப்​பின் உச்​சகட்​ட​மாக அரங்​கேற்​றப்​பட்​டுள்ள இத்தகைய தாக்​குதல்​கள் வன்​மை​யாகக் கண்​டிக்​கத்​தக்​கது. இந்த அடக்​கு​முறை மற்​றும் கைதைக் கண்​டித்​தும், ஞானேஷ்குமார் பதவி நீக்​கத்தை வலி​யுறுத்​தி​யும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்​களில் ஆங்​காங்கே இடது​சா​ரிக் கட்​சிகள் சார்​பில் உடனடி​யாக கண்டன ஆர்ப்​பாட்​டங்​கள் நடத்த அழைப்பு விடுக்​கப்​படு​கிறது.

டெல்லியில் இடதுசாரி தலைவர்கள் கைது: தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு
கோயம்பேடு ஒப்பந்த ஊர்தி பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து நுழைவு கட்டணம் ரூ.500 ஆக உயர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in