கோயம்பேடு ஒப்பந்த ஊர்தி பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து நுழைவு கட்டணம் ரூ.500 ஆக உயர்வு

திரும்பப் பெற உரிமையாளர்கள் வலியுறுத்தல்
கோயம்பேடு ஒப்பந்த ஊர்தி பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து நுழைவு கட்டணம் ரூ.500 ஆக உயர்வு
Updated on: 
1 min read

சென்னை: கோ​யம்​பேடு ஒப்​பந்த ஊர்​திப் பேருந்து நிலை​யத்​தில் ஆம்னி பேருந்​துகளுக்​கான நுழைவு கட்டண உயர்வை திரும்​பப் பெற வேண்​டும் என ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் வலியுறுத்​தி​யுள்​ளனர்.

இது குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்க தலை​வர் அன்​பழகன் முதல்​வர் விஜய்க்கு எழு​திய கடிதத்​தில் கூறியிருப்​ப​தாவது: சென்​னைப் பெருநகர வளர்ச்​சிக் குழு​மத்​தின் கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயம்​பேடு சென்னை ஒப்​பந்த பேருந்து நிலை​யத்​தில், ஆம்னி பேருந்​துகளுக்​கான நுழைவுக் கட்​ட​ணம் 24 மணி நேரத்​துக்கு ரூ.150 வசூலிக்​கப்​பட்டு வந்​தது. ஆனால் ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​களு​டன் எந்த ஆலோ​சனை​யும் இல்​லாமல் வரும் 15-ம் தேதி முதல் அதே 24 மணி நேரத்​துக்கு ரூ.500 வசூலிக்கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

எரிபொருள், சாலை வரி, காப்​பீடு, சுங்​கக் கட்​ட​ணம் மற்​றும் பராமரிப்பு உள்​ளிட்ட செல​வு​களால் பேருந்து உரிமை​யாளர்​கள் ஏற்​கெனவே பெரும் பொருளா​தா​ரச் சுமையை எதிர்​கொண்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில், பேருந்து நிலைய நுழைவுக் கட்டணத்​தின் இந்த உயர்வு மேலும் செல​வுச் சுமையை ஏற்படுத்தும். ஒரு பேருந்​துக்கு மாதத்​தில் 30 நாட்​களும் முந்​தைய மாதச் செலவு ரூ.4,500-லிருந்து ரூ.15ஆ​யிர​மாக உயர்ந்​து, ஒரு பேருந்​துக்கு மாதம் ரூ.10,500 கூடு​தல் செலவு ஏற்​படும். இந்​தச் செலவு பயணக் கட்​ட​ணங்​களி​லும் தாக்​கத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஒரே நேரத்​தில் இவ்​வளவு அதி​க​மான உயர்வை அமல்​படுத்​து​வது பேருந்து உரிமை​யாளர்​களுக்​கும் பயணி​களுக்​கும் சிரமத்தை ஏற்படுத்​தும். எனவே, முதல்​வர் தலை​யிட்​டு, அக்​.15-ம் தேதி முதல் ஆம்னி பேருந்​துகளுக்​கான நுழைவுக் கட்​ட​ணத்தை ரூ.500-ஆக உயர்த்​தும் அறி​விப்​பின் அமலாக்​கத்தை உடனடி​யாக நிறுத்திவைக்க வேண்​டும். கட்டண உயர்வு குறித்த மறு​பரிசீலனை முடி​யும் வரை, ஆம்னி பேருந்​துகளுக்கு 24 மணி நேரத்துக்கு ரூ.150 என்ற முந்​தைய நுழைவுக் கட்​ட​ணத்​தையே தொடர்ந்து வசூலிக்க வேண்​டும்.

சிஎம்​டிஏ அதி​காரி​கள், ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கப் பிர​தி​நி​தி​களு​டன் கலந்​தாலோ​சித்​து, நியாய​மான நுழைவுக் கட்டணத்தை நிர்​ண​யிக்க வேண்​டும். தற்​போது பயன்​பாடின்றி உள்ள கோயம்​பேடு பேருந்து நிலை​யத்தை ஆம்னி பேருந்துகளின் பயன்​பாட்​டுக்​கு ஒதுக்​கித் தரு​மாறு கேட்டுக்கொள்​கிறோம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

கோயம்பேடு ஒப்பந்த ஊர்தி பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து நுழைவு கட்டணம் ரூ.500 ஆக உயர்வு
சென்னை விமான நிலையத்தில் வாகன பார்க்கிங் கட்டணம் உயர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in