தொழில்முறைத் திறன்களுடன் ஜப்பானிய மொழியும் கற்றால் சிறந்த வேலைவாய்ப்பு: சென்னைக்கான துணைத் தூதர் தகவல்

இந்திய - ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னைக்கான ஜப்பான் துணைத் தூதர் தகாஹாஷி முனியோ மற்றும் ‘இந்து’ என்.ரவி ஆகியோர் விருதுகளை வழங்கி பாராட்டினர். இந்திய - ஜப்பான் தொழில் வர்த்தக சபை தலைவர் பத்மநாபன், பொதுச்செயலாளர் சுகுணா, முனைவர் தர் கிருஷ்ணசுவாமி, முனைவர் கே.ஆர்.சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

இந்திய - ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னைக்கான ஜப்பான் துணைத் தூதர் தகாஹாஷி முனியோ மற்றும் ‘இந்து’ என்.ரவி ஆகியோர் விருதுகளை வழங்கி பாராட்டினர். இந்திய - ஜப்பான் தொழில் வர்த்தக சபை தலைவர் பத்மநாபன், பொதுச்செயலாளர் சுகுணா, முனைவர் தர் கிருஷ்ணசுவாமி, முனைவர் கே.ஆர்.சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on: 
1 min read

சென்னை: பொறி​யியல், தகவல் தொழில்​நுட்​பம் போன்ற தொழில் முறை திறன்​களு​டன் ஜப்​பானிய மொழியையும் சேர்த்து கற்​றுக்​கொண்​டால், ஜப்​பானில் மிகச் சிறந்த வேலை​வாய்ப்​பு​களைப் பெற முடியும் என்று சென்​னைக்​கான ஜப்​பான் துணைத் தூதர் தகாஹாஷி முனியோ தெரி​வித்​தார்.

இந்திய - ஜப்​பான் தொழில் வர்த்​தக சபை சார்​பில், இரு நாடுகளின் கலாச்​சா​ரம் குறித்து இளைஞர்​களிடம் புரிதலை ஏற்​படுத்​தும் வகை​யில் கடந்த ஆகஸ்ட் மாதம் போட்​டிகள் நடத்​தப்​பட்​டன. பேச்​சுப் போட்​டி​யில் 67 பேர், கட்​டுரைப் போட்​டி​யில் 51 பேர் என 20 கல்​லூரி​களைச் சேர்ந்த 110-க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் ஆர்​வத்​துடன் பங்​கேற்​றனர்.

இதில் வெற்றி பெற்ற மாணவர்​களுக்கு பரிசளிக்​கும் விழா இந்திய - ஜப்​பான் தொழில் வர்த்​தக சபை தலை​வர் பத்​ம​நாபன் தலை​மையில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. சென்​னைக்​கான ஜப்​பான் துணைத் தூதர் தகாஹாஷி முனியோ, ‘இந்து’ என்.ரவி ஆகியோர் பரிசுகளை வழங்​கினர்.

அவர்​கள் பேசிய​தாவது: தகாஹாஷி முனியோ: மாணவர்​கள் இரு நாடுகளின் எதிர்​காலம் மட்​டுமல்ல; இரு நாடுகளை​யும் இணைக்​கப் போகும் சிறந்த பாலமும்​கூட. ஜப்​பானிய மொழி, கலாச்​சா​ரத்தை கற்​றுக்​கொள்​வது மாணவர்​களுக்கு புதிய சிந்​தனைகள், வாய்ப்​பு​களை​யும் வழங்​கும்.

பொறி​யியல், தகவல் தொழில்​நுட்​பம், உற்​பத்தி துறை, சுகாதா​ரம், சுற்​றுலா, வணிகம் ஆகிய துறைகளில் திறமையான இளைஞர்​கள் ஜப்​பானுக்கு அதிக அளவில் தேவைப்​படு​கின்​றனர்.

தொழில் முறை திறன்​களு​டன் ஜப்​பானிய மொழியையும் சேர்த்து கற்​றுக்​கொண்​டால், ஜப்​பானில் மிகச் சிறந்த வேலை​வாய்ப்​பு​களைப் பெற முடியும்.

‘இந்து’ என்.ரவி: இந்​தியா - ஜப்​பான் இடை​யி​லான உறவு கடந்த 10 ஆண்​டுகளில் உல​களாவிய கூட்​டாண்மை என்ற நிலை​யில் இருந்து சிறப்பு வாய்ந்த உல​களாவிய உத்​திசார் கூட்​டாண்​மையாக தரம் உயர்ந்​துள்​ளது.

இரு நாடுகளுக்​கும் இடை​யி​லான வர்த்​தகம் 2025-26-ம் ஆண்​டில் 27.47 பில்​லியன் அமெரிக்க டாலர்​களை எட்​டியுள்​ளது. இந்​தி​யாவில் ஜப்​பானின் நேரடி முதலீடு 48.17 பில்​லியன் டாலர்​களாக உள்​ளது.

அடுத்த பத்​தாண்​டுகளில் மேலும் 68 பில்​லியன் டாலர்​களை முதலீடு செய்ய ஜப்​பான் திட்​ட​மிட்​டுள்​ளது. அதேபோல, ஜப்​பானிய முதலீட்​டாளர்​களின் விருப்​பமான மாநிலமாகத் தமிழகம் திகழ்​கிறது.

ஆட்​டோமொபைல், எலெக்ட்​ரானிக்ஸ், ரசாயனம் உள்​ளிட்ட துறைகளைச் சேர்ந்த 590-க்​கும் மேற்​பட்ட ஜப்​பானிய நிறு​வனங்​கள் தமிழகத்​தில் உள்​ளன.

சென்னை, ஸ்ரீபெரும்​புதூர், கும்​மி​டிப்​பூண்டி, ஓசூர் ஆகிய தொழில் வழித்​தடங்​களில் ஜப்​பானிய நிறு​வனங்​கள் பெரு​மளவில் உள்​ளன. ஜப்​பானிய மொழி கற்​கும் மாணவர்​களுக்கு உல​களாவிய வேலை​வாய்ப்​பு​கள் காத்​திருக்​கின்​றன. இவ்​வாறு அவர்​கள் பேசினர்.

இந்திய - ஜப்​பான் தொழில் வர்த்​தக சபை பொதுச் செய​லா​ளர் சுகுணா, நிர்​வாகக் குழு உறுப்​பினர்​கள் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி, கே.ஆர்.சிவ​ராமகிருஷ்​ணன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

<div class="paragraphs"><p>இந்திய - ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னைக்கான ஜப்பான் துணைத் தூதர் தகாஹாஷி முனியோ மற்றும் ‘இந்து’ என்.ரவி ஆகியோர் விருதுகளை வழங்கி பாராட்டினர். இந்திய - ஜப்பான் தொழில் வர்த்தக சபை தலைவர் பத்மநாபன், பொதுச்செயலாளர் சுகுணா, முனைவர் தர் கிருஷ்ணசுவாமி, முனைவர் கே.ஆர்.சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |</p></div>
சென்னையில் நாளை 2-வது ‘ஏசி’ மின் ரயில் சேவை: சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில் இயங்கும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in