69-வது நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர்
தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசு சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள் நிர்மல்குமார், அருண்ராஜ்

தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசு சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள் நிர்மல்குமார், அருண்ராஜ்

Updated on
2 min read

பரமக்குடி: ​தி​யாகி இமானுவேல் சேகரனின் 69-வது நினைவு தினத்​தை​யொட்டி ராம​நாத​புரம் மாவட்​டம் பரமக்​குடி​யில் உள்ள அவரது நினை​விடத்​தில் அரசி​யல் தலை​வர்​கள் மரி​யாதை செலுத்​தினர். இதை​யொட்டி 8 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்​தை​யொட்டி அங்கு பல்​வேறு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​தன. நினைவிடத்தில் முதலில் இமானுவேல் சேகரனின் சொந்த ஊரான செல்​லூர் கிராம மக்​கள் சார்​பில் மரி​யாதை செலுத்​தப்​பட்​டது. பின்​னர் இமானுவேல் சேகரன் குடும்​பத்​தின​ரான அவரது மகள் சுந்​தரி பிர​பா​ராணி, பேரன்​கள் சக்​கர​வர்த்​தி, ஆரோக்​கிய கோமன், ஜீவன் ஆகி​யோர் மரி​யாதை செலுத்​தினர். அதைத் தொடர்ந்து தேவேந்​திர பண்​பாட்​டுக் கழகம் சார்​பில் மரி​யாதை செலுத்​தப்​பட்​டது.

தவெக சார்​பில் அமைச்​சர் நிர்​மல்​கு​மார் மலர்​வளை​யம் வைத்து மரி​யாதை செலுத்​தி​னார். அமைச்​சர்​கள் கோ.​கா.அருண்​ராஜ், டி.கே.பிரபு, மதன்​ராஜா, ராஜீவ், எம்​எல்​ஏக்​கள் சபரி ஐங்​கரன் (பெரியகுளம்), இளங்​கோவன் (மா​னாமதுரை), கார்த்​திக் (ஸ்ரீவில்​லிபுத்​தூர்), அய்​ய​னார் (நிலக்​கோட்​டை), கார்த்​தி​கேயன் (மதுரை கிழக்​கு), கோபிசன் (மதுரை தெற்​கு), கருப்​பையா (சோழ​வந்​தான்) உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

<div class="paragraphs"><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்டோர். படங்கள்: எல்.பாலச்சந்தர்.</p></div>

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்டோர். படங்கள்: எல்.பாலச்சந்தர்.

இதேபோல் திமுக சார்​பில் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி மலர் வளை​யம் வைத்து மரி​யாதை செலுத்​தி​னார். முன்​னாள் அமைச்​சர்​கள் பெரியகருப்​பன், ராஜகண்​ணப்​பன், எம்​எல்​ஏக்​கள் காதர்​பாட்சா, பொன்முத்​து​ரா​மலிங்​கம், கதிர​வன் உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

அதி​முக சார்​பில் முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மார், மணி​கண்​டன், ராம​நாத​புரம் மாவட்​டச் செய​லா​ளர் முனிய​சாமி உள்​ளிட்​டோர் மரி​யாதை செலுத்​தினர். மேலும், பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், நடிகை கஸ்​தூரி, முன்னாள் தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, சுற்​றுலாத் துறை அமைச்​சர் ராஜேஷ்கு​மார், நாம் தமி​ழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி ​தினகரன், தேமு​திக நகரச் செய​லா​ளர் அன்பு தட்​சிணா​மூர்த்​தி, விசிக சார்​பில் சமூக நீதித்​துறை அமைச்​சர் வன்​னியரசு, புதிய தமி​ழ​கம் கட்​சித் தலை​வர் கிருஷ்ண​சாமி, மதி​முக சார்​பில் சதன் திரு​மலைக்​கு​மார், பாமக பொதுச் செய​லா​ளர் வடிவேல் ராவணன், வீ த லீடர்ஸ் அமைப்​பின் சார்​பில் தரணி முரு​கேசன், எஸ்​டிபிஐ கட்​சி​யின் சார்​பாக மாநில தலை​வர் நெல்லை முபாரக் உள்​ளிட்​டோரும் மரி​யாதை செலுத்​தினர்.

ராம​நாத​புரம் மாவட்ட எஸ்பி சந்​தீஷ் தலை​மை​யில் 8 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். விதி​மீறல்​களை தடுக்க ராம​நாத​புரம் மாவட்​டம் முழு​வதும் 38 சோதனைச் சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. பரமக்​குடி மற்​றும் சுற்​று​வட்​டார பகு​தி​களில் 700 கண்​காணிப்பு கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்டு பரமகுடி நகர் காவல் நிலைய கட்​டுப்​பாட்டு அறை​யில் தொடர்ந்து கண்​காணிக்​கப்​பட்​டது.

<div class="paragraphs"><p>தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசு சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள்&nbsp;நிர்மல்குமார், அருண்ராஜ் </p></div>
டெல்லியில் ‘பிரிக்ஸ்’ மாநாடு கோலாகலம்: ரஷ்ய அதிபர் புதின் - பிரதமர் மோடி பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in