மலைப்பகுதி கட்டுமானங்களுக்கு நகரமைப்பு அதிகாரிகளே ஒப்புதல் வழங்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு

தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு
மலைப்பகுதி கட்டுமானங்களுக்கு நகரமைப்பு அதிகாரிகளே ஒப்புதல் வழங்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு
Updated on
1 min read

சென்னை: மலைப்​பகு​தி​களில் வீட்​டுமனை​களை அமைக்​க​வும், கட்​டு​மானப் பணி​களை மேற்​கொள்​ள​வும் ஒப்​புதல் வழங்க நகரமைப்பு திட்ட அதி​காரி​களுக்கு அதி​காரம் வழங்கி பிறப்​பிக்​கப்​பட்​டுள்ள அரசாணையை ரத்து செய்​யக்​கோரி தொடரப்​பட்ட வழக்​கில் தமிழக அரசு 4 வாரங்​களில் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்​னையைச் சேர்ந்த சுற்​றுச்​சூழலியல் ஆர்​வல​ரான முரளிதரன் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “நகர்​மய​மாதல் காரண​மாக தொழிற்​சாலைகள் பெருகி சுற்​றுச்​சூழலுக்கு பாதிப்பு ஏற்​பட்​ட​தால் மலைப்​பகு​தி​களைப் பாது​காக்​கும் நோக்​கில் மலைப்​பகு​தி​கள் பாது​காப்பு ஆணை​யம் கடந்த 1990-ம் ஆண்டு அமைக்​கப்​பட்​டது.

இந்த ஆணை​யத்​தின் கீழ் உள்ள 597 கிராமங்​களில் ஆணை​யத்​தின் ஒப்​புதல் இல்​லாமல் எந்​தவொரு வளர்ச்​சிப் பணி​களை​யும் மேற்​கொள்ள முடி​யாது.

இந்​நிலை​யில் மலைப் பகு​தி​களில் வீட்​டுமனை​களை அமைக்​க​வும், கட்​டு​மானங்​களை மேற்​கொள்​ள​வும் மலைப்​பகுதி பாது​காப்பு ஆணை​யத்​தின் ஒப்​புதல் பெறு​வதற்​குப் பதிலாக நகரமைப்பு திட்ட அதி​காரி​களுக்கு அதி​காரம் வழங்​கி​யும், நிலங்​களை வகை மாற்​றம் செய்ய அனு​மதி வழங்​கி​யும்கடந்த பிப்​ர​வரி மாதம் அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த அரசாணை மலைப்பகுதி பாது​காப்பு ஆணை​யத்​தின் விதி​முறை​களை நீர்த்​துப் போகச் செய்​யும் வகை​யில் உள்​ளது. தமிழக அரசின் இந்த அரசாணை​யால் மலைப்​பகு​தி​களின் சுற்​றுச்​சூழல் பாதிக்​கப்​படும் என்​ப​தால், அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்​டும்.

அது​வரை அந்த அரசாணை அடிப்​படை​யில் மலைப்​பகு​தி​களில் வீட்​டுமனை​களை அமைக்​க​வும், கட்​டு​மானப் பணி​களை மேற்​கொள்​ள​வும் நகரமைப்பு திட்ட அதி​காரி​கள் நேரடி​யாக ஒப்​புதல் வழங்​கத் தடை விதிக்க வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, இது தொடர்​பாக தமிழக அரசு 4 வாரங்​களில் பதிலளிக்க உத்​தர​விட்​டு, விசா​ரணை​யைத் தள்ளி வைத்​துள்​ளனர்​.

மலைப்பகுதி கட்டுமானங்களுக்கு நகரமைப்பு அதிகாரிகளே ஒப்புதல் வழங்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு
கோயில் சொத்து பத்திரப் பதிவு அரசாணை வாபஸ்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in