கோயில் சொத்து பத்திரப் பதிவு அரசாணை வாபஸ்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கோயில் சொத்து பத்திரப் பதிவு அரசாணை வாபஸ்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
Updated on
1 min read

மதுரை: கோ​யில் சொத்​துகளை பத்​திரப்​ப​திவு செய்​யும் வகை​யில் பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணை திரும்ப பெறப்​பட்​டுள்​ள​தாக அரசு தெரிவித்ததால் அந்த அரசாணைக்கு எதி​ரான மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது.

சேலத்​தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: தமிழகத்​தில் கோயில் நிலங்​களை பாது​காக்​கும் வகை​யில் பத்​திரப் பதிவுத் துறை​யில் கோயில் நிலங்​களின் மதிப்​பீட்டை ‘பூஜ்ஜி​யம் மதிப்​பு’ எனபதிவு செய்​யப்​படு​வது வழக்​கம்.

இதனால் கோயில் நிலங்​களை வேறு யாரும் பத்​திரம் பதிவு செய்​ய​வோ, பட்டா பெறவோ முடி​யாது. கோயில் நிலங்​களை யாராவது பத்​திரப்​ப​திவு செய்ய முயன்​றால் பதிவுத்​துறை​யில் புகார் அளித்து பதிவு ரத்து அல்​லது பதிவு நிறுத்​தம் செய்து வைக்​கப்​படும்.

இந்​நிலை​யில் கோயில் சொத்​துகளை பத்​திரப்​ப​திவு செய்​ய​வும், பட்டா பெற​வும் வழி​வகை செய்​யும் வகை​யில் வரு​வாய்த்​துறை 2025-ம் ஆண்டு ஆக.29-ல் அரசாணை பிறப்​பித்​துள்​ளது.

இந்த அரசாணை அடிப்​படை​யில் கோயில் சொத்துகள் தொடர்​பாக முறை​யீடு செய்ய வேண்​டும் என்​றால், மூத்த ஐஏஎஸ் அதி​காரி​கள் கொண்ட குழு​விடம்​தான் முறையிட முடி​யும்.

இந்த அரசாணை கோயில் சொத்​துகள் தனி​நபர்​களுக்கு எளி​தாகப் பெயர் மாற்​றம் செய்ய வழி​வகுக்​கிறது. இது சட்​ட​விரோதம். இது அரசி​யலமைப்புச் சட்​டத்​துக்கு எதிரானது. பட்டா நிலம், மானிய நிலம், ஊழிய நிலம் என்ற வகைப்​பாடு​களில் கோயில் நிலங்​கள் உள்​ளன. புதிய அரசாணை​யால் கோயில் சொத்​துகள் பறி​போகும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.

அதனால் அரசாணையை ரத்து செய்​தும், அது​வரை அரசாணையை செயல்​படுத்த இடைக்​கால தடை விதித்​தும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனுவை ஏற்​கெனவே விசா​ரித்த 2 நீதிப​தி​கள் அமர்வு அரசாணையை செயல்​படுத்த இடைக்​கால தடை விதித்து உத்​தர​விட்​டது.

இந்த மனு நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தபோது அந்த அரசாணை திரும்ப பெறப்​பட்​டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை நீதிபதிகள் தள்​ளுபடி செய்தனர்.

கோயில் சொத்து பத்திரப் பதிவு அரசாணை வாபஸ்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
உடலை வாங்காமல் அரசியல் செய்வதா? - மானாமதுரை இளைஞர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in