கோயில் நிலத்தில் கலைஞர் சர்வதேச கருத்தரங்க மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு: அறநிலையத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிலத்தில் கலைஞர் சர்வதேச கருத்தரங்க மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு: அறநிலையத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ​முட்​டுக்​காடு அருகே கோயில் நிலத்​தில் ரூ.525 கோடி மதிப்​பீட்​டில் கலைஞர் சர்​வ​தேச கருத்​தரங்க மையம் அமைக்க எதிர்ப்பு தெரி​வித்து தொடரப்​பட்​ட வழக்​கில், அறநிலை​யத் துறை விரி​வாக பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை மாடம்​பாக்​கத்​தைச் சேர்ந்த ஓய்​வு​பெற்ற ராணுவ வீர​ர் சந்​தானம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்திருந்த பொதுநல மனு​வில், “செங்​கல்பட்டு முட்​டுக்​காடு அருகே 37.49 ஏக்​கர் பரப்​பில் ரூ.525 கோடி மதிப்​பீட்​டில் கலைஞர் சர்​வ​தேச கருத்​தரங்க மையம் கட்​டப்​பட்டு வரு​கிறது.

முட்​டுக்​காடு கிராமத்​தில் வேம்​படி​யம்​மன் கோயிலுக்​குச் சொந்​த​மான 3.08 ஹெக்​டேர் நிலத்தை ஆக்​கிரமித்து கட்​டப்​படும் இந்த கட்​டு​மானப் பணி​களுக்கு தடை விதிக்​கக் கோரி​யும் அற நிலை​யத் துறை​யிடம் பலமுறை மனு அளித்​தும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை.

எனவே கோயில் நிலத்​தில் கலைஞர் சர்​வ​தேச கருத்​தரங்கு மையம் அமைக்​கக்​கூ​டாது என தடை விதிக்க வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார். இந்த வழக்கு நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், இ.மனோகரன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மனு​தா​ரர் தரப்​பில், “கோ​யில் நிலங்​களை வணிக நோக்​கில் பயன்​படுத்​தக்​கூ​டாது என ஏற்​கெனவே சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இதுதொடர்​பாக ஆரம்​பத்​திலேயே அதி​காரி​களிடம் புகார் அளித்​தும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை.

தற்​போது 60 சதவீத கட்​டு​மானங்​கள் முடிந்து விட்​ட​தால், அந்த கட்​டு​மானத்தை அப்​புறப்​படுத்த உத்​தர​விட வேண்​டும்” என வாதிடப்​பட்​டது. அறநிலை​யத்​துறை தரப்​பில், “கோ​யில் நிலத்தை ஆக்​கிரமித்து எந்​தவொரு கட்​டு​மான​மும் அங்கு மேற்​கொள்​ளப்​பட​வில்​லை.

சர்​வ​தேச கருத்​தரங்கு மையம் அமைப்​ப​தற்​கான நிலம் கையகப்​படுத்​தும் பணி இன்​னும் முழு​மையடை​வில்​லை. இது தொடர்​பாக விரி​வாக பதிலளிக்க 2 வார காலம் அவகாசம் அளிக்​க வேண்​டும்” எனக் கோரப்​பட்​டது.

அதையடுத்து நீதிப​தி​கள், இதுதொடர்​பாக விரி​வான அறிக்கை தாக்​கல் செய்ய அறநிலை​யத் துறைக்கு உத்​தர​விட்​டு, விசா​ரணையை செப்​.8-க்கு தள்​ளி​வைத்​து உள்​ளனர்.

கோயில் நிலத்தில் கலைஞர் சர்வதேச கருத்தரங்க மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு: அறநிலையத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் ரூ.9 லட்சம் கொள்ளை: இயந்திரத்தை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்துள்ளனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in