கிளப் உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று சேகரிக்க முடியாது: காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை எதிர்த்து வழக்கு

கிளப் உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று சேகரிக்க முடியாது: காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை எதிர்த்து வழக்கு
Updated on: 
1 min read

சென்னை: ​காலி மது​பாட்​டில்​களை திரும்​பப் பெறும் திட்​டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக எப்​எல்2, எப்​எல்3 மது​பான விற்​பனை உரிமம் பெற்​றுள்ள தமிழ்​நாடு பொழுது​போக்கு கிளப்​கள், நட்​சத்​திர ஓட்​டல்​கள் சங்​கத்​தின் செய​லா​ளர் மதுரை எம்​.ஜெய்​கணேஷ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வனம், சுற்​றுச்​சூழல் பாது​காப்பு தொடர்​பான வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு அமர்வு பிறப்​பித்த உத்​தர​வுப்​படி, டாஸ்​மாக் மூலம் விற்கப்​படும் மது​

பானங்​களுக்கு ரூ.10 கூடு​தலாக வசூலித்​து, காலி மது​பாட்​டில்​களை திருப்பி ஒப்​படைக்​கும்​போது அந்த தொகையை கொடுக்​கும் திட்​டம் அறி​முகம் செய்​யப்​பட்​டது.

இருப்​பினும், கடந்த அக்​.29-ம் தேதி மது​பாட்​டிலுக்கு ரூ.10 கூடு​தலாக வசூலிப்​ப​தற்​குப் பதிலாக, சுற்​றுச்​சூழல், சமூகநல வரி​யாக ரூ.10 விதித்து அதி​கபட்ச சில்​லறை விலை உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

மேலும் காலி பாட்​டில்​களை திரும்​பப் பெற்​று, ஒரு பாட்​டிலுக்கு ரூ.10 வீதம் பணத்தை திரும்ப வழங்க ‘ரிவர்ஸ் வெண்​டிங் மெஷின்’ நிறு​வ​வும் தீர்​மானிக்​கப்​பட்​டுள்​ளது.

மது பாட்​டில்​களின் அதி​கபட்ச சில்​லறை விலையை கூடு​தல் வரி என்ற அடிப்​படை​யில் உயர்த்​து​வ​தால் பொழுது​போக்கு கிளப், நட்​சத்​திர ஓட்​டல்​களின் வணி​கம் பாதிக்​கும்.

மேலும், கிளப்கள் மீது ஒரு பாட்​டிலுக்கு ரூ.10 கூடு​தலாக சுற்​றுச்​சூழல், சமூகநல வரியை விதிக்க முடி​யாது. தவிர, டாஸ்​மாக்​கில் இருந்து கொள்​முதல் செய்​யப்​படும் மது​பானங்​களை கிளப் உறுப்​பினர்​கள், கிளப் வளாகத்​துக்​குள்​ளும் அருந்​தலாம் அல்​லது வீட்​டுக்​கும் எடுத்​துச் செல்​லலாம்.

எனவே, தங்​களது உறுப்​பினர்​களின் வீடு​களில் இருந்து காலி மது​பாட்​டில்​களை சேகரிக்க வேண்​டும் என கிளப்​களை நிர்​பந்​திக்க முடி​யாது. அது சாத்​தி​யமற்​றது.

எனவே, காலி மது​பாட்​டில்​களை திரும்​பப் பெறும் திட்​டம் தொடர்​பாக மது​விலக்​கு, ஆயத்​தீர்வை ஆணை​யர் கடந்த 2022-ல் பிறப்​பித்த சுற்​றறிக்கை தன்​னிச்​சை​யானது, நடை​முறைக்கு சாத்​தி​யமற்​றது என்​ப​தால் அதை ரத்து செய்ய வேண்​டும்.

கூடு​தல் வரி என்ற பெயரில் மது​பானங்​களின் விலையை உயர்த்​த​வும் தடை வி​திக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கோரி​யுள்​ளார். இந்த மனு விரை​வில்​ வி​சா​ரணைக்​கு வரவுள்​ளது.

கிளப் உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று சேகரிக்க முடியாது: காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை எதிர்த்து வழக்கு
மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 1000 ஏசி மின் பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு: முதல்வர் விஜய் உத்தரவு

X