“புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை தாக்க நேரு எம்எல்ஏ முயற்சி” - வையாபுரி மணிகண்டன்

வையாபுரி மணிகண்டன் | கோப்புப் படம்

வையாபுரி மணிகண்டன் | கோப்புப் படம்

Updated on: 
2 min read

புதுச்சேரி: “புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை தாக்க நேரு எம்எல்ஏ முயற்சித்துள்ளார். அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரியில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அது சம்பந்தமாக ஒரு நபரை காவல் துறையினர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது. ஆனால் நேரு (எ) குப்புசாமி எம்எல்ஏ சுய விளம்பரத்துக்காக, அரசியல் தேர்தல் லாபத்துக்காக, தன்னுடைய மாண்மையும், சட்டத்தையும் மீறி புதுச்சேரி மாநில மக்கள் முகம் சுளிக்கும் விதத்தில் சட்டப் பேரவையில் முதல்வர், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவைக்குள் ரவுடி கூட்டத்தை கூட்டிக்கொண்டு தகராறு செய்ய சென்றபோது, தற்போதைய சட்டப்பேரவை தற்காலிக தலைவர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதிலும் அவரையும் மரியாதை குறைவாக நடத்தியுள்ளார்.

எப்போதெல்லாம் நேரு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்படுகிறாரோ அப்போதெல்லாம் பெரிய தலைவர்கள் எல்லாம் ஆட்சி நடத்திய சட்டப்பேரவை மாண்பை இழக்கிறது. நேரு கேள்வி கேட்பதற்கு முன்பாகவே என்டிஏ கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்துவிட்டது. அதன் மீது சட்ட ரீதியான கேள்விகள் கேட்க அவருக்கு முழு உரிமை உள்ளது. ஆனால், ரவுடிசம் செய்ய எந்தவிதத்திலும் உரிமை இல்லை.

உண்மையில் அந்தப் பெண்ணின் மீது அக்கறை இருந்திருந்தால் நேரு எம்எல்ஏ சட்டப்பேரவையில் அதுபோன்ற செயலை செய்திருக்க மாட்டார். அவர் செய்த செயலால் இன்று யார், எந்த பெண்மணி என்று உலகம் முழுவதும் தேடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்மணி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.

பொதுப் பணித்துறை அமைச்சர் அலுவலகத்தினுள் நுழைந்து அவரை தாக்க பாய்ந்துள்ளார். நியாயமாக நேரு எம்எல்ஏ மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பெருந்தன்மையுடன் அமைச்சர் புகார் அளிக்கவில்லை.

சட்டப்பேரவையில் பேசி இதுபோன்ற சம்பவங்களுக்கு வலுவான சட்டங்களை இயற்ற முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து ரவுடி போன்று கத்தியை எடுத்துக் கொண்டு எம்எல்ஏ சுற்றுவது வேலை இல்லை. நேரு எம்எல்ஏ இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால், நாங்களும் இதுபோன்ற செயல்களில் இறங்க வெகுநேரம் ஆகாது.

சட்டம் - ஒழுங்கு புதுச்சேரியில் நன்றாக இருக்கிறது. போலீஸார் குற்றவாளிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கின்றனர்.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் தோல்வி பயம் காரணமாகத்தான் நேரு எம்எல்ஏ இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றார். எனவே, நேரு எம்எல்ஏ நாகரிமாக நடந்து கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் கம்பம் சாய்ந்து சிறுவன் உயிரிழந்தார். அவருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், 50 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் உருளையன்பேட்டை எம்எல்ஏவும், தவெக ஆதரவு பெற்ற நேயம் மக்கள் கழகத் தலைவருமான நேரு ஆதரவாளர்களுடன் நேற்று சட்டப்பேரவையை முற்றுகையிட்டார்.

சட்டப்பேரவை படிக்கட்டில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டார். சட்டப்பேரவை தற்காலிக தலைவர், அமைச்சர் உள்ளிட்டோரிடமும் வாக்குவாம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>வையாபுரி மணிகண்டன் | கோப்புப் படம்</p></div>
“மனதைத் தொடும் காட்சிகள் நிறைந்தது ‘பத்தா’ படம்” - இயக்குநர் ஷங்கர் பாராட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in