“மனதைத் தொடும் காட்சிகள் நிறைந்தது ‘பத்தா’ படம்” - இயக்குநர் ஷங்கர் பாராட்டு

“மனதைத் தொடும் காட்சிகள் நிறைந்தது ‘பத்தா’ படம்” - இயக்குநர் ஷங்கர் பாராட்டு
Updated on: 
1 min read

“இயக்குநர் பாலாஜி தரணிதரனிடம் இருந்து வந்திருக்கும் மற்றொரு மறக்க முடியாத படைப்பு ‘பத்தா’. இது பாலாஜியின் ‘லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்’ படைப்பு” என இயக்குநர் ஷங்கர் பாராட்டி உள்ளார். 

படம் குறித்த தனது கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘நல்ல கதை, மனிதம், நகைச்சுவை கொண்ட, கைதட்டல் பெறுவதற்கான பல தருணங்களைக் கொண்ட அழகான படம் ‘பத்தா’.

அருமையான நடிகர்கள் தேர்வு, அவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில் வரும் ஒவ்வொரு க்ளோஸ் - அப் காட்சிகளில் வரும் முகங்கள் அவ்வளவு அழகு.

விஜய் சேதுபதி மனதைத் தொடும்படியான சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். சிறுவன் சாய் ப்ரித்விராஜின் நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது. லிஜோமோல் ஜோஸ் இயல்பாகவும் கம்பீரமாகவும் இருக்கிறார்.

புதுமையாகவும் வழக்கத்தில் இருந்து மாறுபட்டும் இருக்கும் சாய் அபயங்கரின் பின்னணி இசை, சில காட்சிகளை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது.

உணர்வுப்பூர்வமான மனதைத் தொடும் காட்சிகள் நிறைந்த படம். இப்படி ஒரு சிறப்பான படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் அட்லீ, பிரியா அட்லீக்கு வாழ்த்துகள்.

இயக்குநர் பாலாஜி தரணிதரனிடம் இருந்து இன்னுமொரு மறக்க முடியாத படம் வந்திருக்கிறது. இது பாலாஜியின் ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ படைப்பு” என்று இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.

பாலாஜி தரணிதரன் இயக்​கத்​தில் விஜய் சேதுபதி நடிப்பில் ​வெளிவந்திருக்கும் படம் ‘பத்​தா’. நடு​வுல கொஞ்சம் பக்​கத்த காணோம்’, ‘சீதக்​கா​தி’ படங்​களுக்​குப் பிறகு இந்த கூட்டணி 3-வது முறை​யாக இணை​யும் படம் இது.

இதில் லிஜோமோல் ஜோஸ் கதா​நாயகி​யாக நடித்திருக்கிறார். சாய் அபயங்​கர் இசையமைக்​கும் இப்படத்​துக்கு செல்​வகு​மார் எஸ்கே ஒளிப்​ப​திவு செய்​து உள்​ளார். இப்படம் இன்று (அக்.1) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

“மனதைத் தொடும் காட்சிகள் நிறைந்தது ‘பத்தா’ படம்” - இயக்குநர் ஷங்கர் பாராட்டு
“இந்தியில் ‘த்ரிஷ்யம் 3’ திரைக்கதை முற்றிலும் புதியது” - அஜய் தேவ்கன் விவரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in