காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் அண்ணாமலையார் கோயிலில் இலவச லட்டு நிறுத்தம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பிரசாத விற்பனை  நிலையம் நேற்று மாலை மூடப்பட்டிருந்தது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பிரசாத விற்பனை நிலையம் நேற்று மாலை மூடப்பட்டிருந்தது.

Updated on
1 min read

திரு​வண்​ணா​மலை: திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயி​லில் வணிக காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு காரண​மாக பக்​தர்​களுக்கு இலவச​மாக வழங்​கப்​பட்டு வந்த லட்டு பிர​சாதம் நிறுத்​தப்​பட்​டுள்​ளது.

திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயி​லில் பக்​தர்​களுக்கு இலவச​மாக லட்டு பிர​சாதம் வழங்​கப்​பட்டு வரு​கிறது. மேலும், கோயில் பிர​சாத​மாக முறுக்​கு, மிளகு வடை, அதிரசம், லட்டு உள்​ளிட்​ட​வை​கள் ரூ.50-க்​கும், புளி​சாதம் மற்​றும் சர்க்​கரை பொங்​கல் ரூ.10-க்​கும் விற்​பனை செய்​யப்​படு​கிறது

இந்​நிலை​யில் அமெரிக்க- இஸ்​ரேல் கூட்​டுப் படைகளுக்​கும் ஈரானுக்​கும் இடையே நடை​பெற்று வரும் போர் காரண​மாக வணிக காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு நாடு முழு​வதும் நிலவி வரு​கிறது. இதன்படி, திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயி​லிலுக்​கும் வணிக காஸ் சிலிண்​டர் கிடைக்​காத​தால் பிர​சாதம் தயாரிக்க முடி​யாமல் இலவச லட்டு பிர​சாதம் முற்​றி​லு​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளது.

அதே​போல், பக்​தர்​களுக்கு விற்​கப்​படும் பிர​சாதங்​களான முறுக்​கு, மிளகு வடை, அதிரசம், லட்டு உள்​ளிட்​ட​வை​களும் சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டால் தயாரிக்க முடி​யாமல் நிறுத்​தப்​பட்​டுள்​ளன. தற்​போது பக்​தர்​களுக்கு புளி​சாதம், சர்க்​கரை பொங்​கல் மட்​டும் விற்​பனை செய்​யப்​பட்டு வரு​கிறது.

அண்​ணா​மலை​யார் கோயி​லில் கடந்த 2 ஆண்​டு​களுக்கு மேலாக சுவாமி தரிசனம் முடிந்​து, வெளியே வரும் பக்​தர்​களுக்கு இலவச​மாக வழங்​கப்​பட்டு வந்த பிர​சாதம் நிறுத்​தப்​பட்​டுள்​ள​தால் பக்​தர்​கள் ஏமாற்​றத்​துடன் செல்​லும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து கோயில் இணை ஆணை​யர் பரணிதரணிடம் கேட்​ட​போது, “பக்​தர்​களுக்கு தொடர்ந்து பிர​சாதம் வழங்​கு​வதற்கு நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. வணிக காஸ் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ள​தால், அதற்கு மாற்​றாக கோயி​லில் நிரந்​தர​மாக மின்​சா​ரம் மூலம் பிர​சாதம் தயாரிப்​ப​தற்​காக மின்​சாதன அடுப்​பு​கள் அமைக்​கும் பணி மேற்​கொள்​ளப்பட உள்ளன” என்​றார். மேலும், கோயில் வளாகத்​துக்​குள் விறகு அடுப்பு பயன்​படுத்​து​வதற்​கு அனு​ம​தி இல்லை எனவும்​ கூறப்​படுகிறது.

<div class="paragraphs"><p>திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பிரசாத விற்பனை  நிலையம் நேற்று மாலை மூடப்பட்டிருந்தது. </p></div>
ஈரான் போர் தாக்கம்: கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி 30% பாதிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in