சமூக வானொலி நிலைய மேம்பாட்டுக்கு ரூ.50 கோடி நிதி: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்

சமூக வானொலி நிலைய மேம்பாட்டுக்கு ரூ.50 கோடி நிதி: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழகம் உள்பட பல்​வேறு மாநிலங்​களில் செயல்​படும் சமூக வானொலி நிலைய மேம்​பாட்​டுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ள​தாக, மக்​களவை​யில் மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார்.

தமிழகம் உள்பட பல்​வேறு மாநிலங்​களில் செயல்​படும் வானொலி நிகழ்ச்​சிகளின் செயல்​திறன், நிலை​யான நிதி​சார் நடவடிக்​கைகள் தொடர்​பான ஆய்​வு​களை மத்​திய தகவல் ஒலிபரப்பு அமைச்​சகம் மதிப்​பீடு செய்​கிறது.

நாட்​டில் தமிழகம் உள்பட பல மாநிலங்​களில் உள்ள சமூக வானொலி நிலை​யங்​களை வலுப்​படுத்​தும் வகை​யில், பல்​வேறு முன்​முயற்​சிகளை மத்​திய அரசு மேற்​கொண்டு வரு​கிறது.

இதன் ஒரு பகு​தி​யாக, இந்​தி​யா​வில் சமூக வானொலி நிலைய மேம்​பாட்​டுக்​கான ஆதரவு திட்​டத்தை மத்​திய அரசின் திட்​ட​மாக விரிவுபடுத்​தப்​பட்​டு, 2026-ம் ஆண்டு முதல் 2030-ம் ஆண்டு வரை அடுத்த 5 ஆண்​டு​களுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இத்​திட்​டத்​தின் கீழ், இந்த வானொலி நிலை​யங்​களில் பணிபுரி​யும் ஊழியர்​களுக்​கான சம்​பளம், கருவி​கள் மற்​றும் உபகரணங்​களை கொள்​முதல் செய்​வது, சூரியமின் உற்​பத்தி அமைப்பை நிறு​வுதல் ஆகிய​வற்​றுக்​காக இந்த நிதி செல​விடப்​படும்.

தமிழகத்​தில் செயல்​பட்டு வரும் 6 சமூக வானொலி நிலை​யங்​களுக்கு கடந்த 3 ஆண்​டு​களில் ரூ.52.59 லட்​சம் நிதி​யுதவி விடுவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில், தரு​மபுரி சமூக வானொலி நிலை​யத்​துக்கு ரூ.10 லட்​சம் நிதி​யுத​வி​யும் அடங்​கும்.

சமூக வானொலி நிலை​யங்​களின் செயல்​பாடு​கள் குறித்த ஆய்​வு​கள் தொடர்​பான அறிவிக்​கையை மத்​திய தகவல் ஒலிபரப்பு அமைச்​சகத்​தின் அதி​காரப்​பூர்வ இணை​யதளத்​தில் (https://mib.gov.in/) பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளன.

அனைத்து வானொலி நிலை​யங்​களின் விவரங்​கள் இந்த இணை​யதளத்​தின் மூலம் பெற்​றுக் கொள்ள முடி​யும். மக்​களவை​யில் கேள்வி ஒன்​றுக்கு எழுத்து மூலம் அளித்​துள்ள பதிலில், மத்​திய தகவல் ஒலிபரப்​புத் ​துறை இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன்​ இதனை தெரி​வித்​துள்​ளார்​.

சமூக வானொலி நிலைய மேம்பாட்டுக்கு ரூ.50 கோடி நிதி: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்
சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம்: ரூ.1,970 கோடி நிதி பற்றாக்குறை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in