திராவிட கட்சிகளின் வெற்றியை பாதித்த கிருஷ்ணசாமி, சசிகலா கட்சி வேட்பாளர்கள்

திராவிட கட்சிகளின் வெற்றியை பாதித்த கிருஷ்ணசாமி, சசிகலா கட்சி வேட்பாளர்கள்
Updated on
1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் முடிவு​கள் நேற்று வெளி​யான நிலை​யில், குறிப்​பிட்ட சில தொகு​தி​களில் திமுக, அதி​முக போன்ற திராவிடக் கட்​சிகளின் வெற்​றிக்கு கிருஷ்ண​சாமி, சசிகலா உள்​ளிட்​டோரின் கட்​சிகள் பாதிப்பை ஏற்​படுத்​தின.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்ட நிலை​யில், பல்​வேறு தொகு​தி​களில் திமுக, அதி​முக போன்ற திரா​விடக் கட்​சிகளுக்கு கிருஷ்ண​சாமி​யின் புதிய தமிழகம் கட்சி வேட்​பாளர்​களும், சசிகலா​வின் அனைத்​திந்​திய புரட்​சித் தலை​வர் மக்​கள் முன்​னேற்​றக்​கழக வேட்​பாளர்​களும் அதிர்ச்சி அளித்​தனர்.

புதிய தமிழகம் கட்​சித் தலை​வர் கிருஷ்ண​சாமி, ஓட்​டப்​பி​டாரம் தொகு​தி​யில் ஆரம்ப சுற்​றுகளில் முன்​னிலை வகித்​தா​லும் பின்​னர் 5-வது இடத்​துக்கு சென்​றார்.

அவர் 15 ஆயிரம் ஓட்​டு​களுக்கு மேலாக வாங்கி திராவிடக் கட்​சிகள் தோல்​வியைச் சந்​திக்க ஒரு காரணி​யாக அமைந்​தார். திருநெல்​வேலி தொகு​தி​யில் புதிய தமிழகம் கட்சி வேட்​பாளர் ஷியாம் 10,643 ஓட்​டு​களை வாங்​கி​னார்.

இது திமுக வேட்​பாளர் சுப்​ரமணி​யன் 11 ஆயிரம் ஓட்​டு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைய காரண​மாக அமைந்​தது.  வைகுண்​டத்​தில் புதிய தமிழகம் கட்சி வேட்​பாளர் ராஜசுதன் 1,015 ஓட்​டு​கள் வாங்​கிய நிலை​யில், அதி​முக வேட்​பாளர் 1,186 ஓட்​டு​கள் வித்​தி​யாசத்​தில் தவெக வேட்​பாளர் சரவணனிடம் தோல்வி அடைந்​தார்.

கோவில்​பட்டி தொகு​தி​யில் ஒவ்​வொரு சுற்​றி​லும் தவெக வேட்​பாளர் பாலசுப்​பிரமணி​யன், திமுக வேட்​பாளர் கருணாநிதி இடையே கடும் போட்டி நில​வியது. குறிப்​பாக 24-வது சுற்று முடி​வில், 446 ஓட்​டு​கள் வித்​தி​யாசத்​தில் கருணாநிதி முன்​னிலை இருந்​தார்.

இருப்​பினும், அதே தொகுதி​யில் சசிகலா கட்சி வேட்​பாளர் 446 ஓட்​டு​களை பிரித்​து, திமுக​வுக்கு அதிர்ச்சி அளித்​தார். உசிலம்​பட்டி தொகு​தி​யில் அதி​முக வேட்​பாளர் மகேந்​திரன் 1,805 ஓட்​டு​கள் வித்​தி​யாசத்​தில் தவெக வேட்​பாளர் விஜய்​யிடம் தோல்​வியைச் சந்​தித்​தார்.

இத்​தொகு​தி​யில், சசிகலா​வின் அகில இந்​திய புரட்​சித் தலை​வர் மக்​கள் முன்​னேற்​றக் கழகம் கட்சி வேட்​பாளர் அய்​யப்​பன் 16,620 ஓட்​டு​கள் பெற்​றது முக்​கியக் காரண​மாக அமைந்​தது.

மன்​னார்​குடி திமுக வேட்​பாளர் டி.ஆர்​.பி.​ராஜா 1,566 ஓட்​டு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தார். இதற்கு சசிகலா கட்​சி​யின் வேட்​பாளர் ராசுபிள்ளை 1,949 ஓட்​டு​களை​யும், தமிழக வாழ்​வுரிமைக் கட்சி வேட்​பாளர் கோவிந்​த​ராஜ் 635 ஓட்​டு​களை​யும் பிரித்தது காரண​மாக அமைந்​தது.

சாத்​தூர் தொகு​தி​யில் 6 ஆயிரம் ஓட்டு வித்​தி​யாசத்​தில் திமுக, பாஜக வேட்​பாளர்​கள் இடையே கடும் போட்டி நில​வி​னாலும், சசிகலா கட்சி வேட்​பாளர் இசக்கி ராஜா 11 ஆயிரம் ஓட்​டு​களைப் பிரித்​தது முக்​கிய தாக்​கத்தை ஏற்​படுத்​தியது.

திராவிட கட்சிகளின் வெற்றியை பாதித்த கிருஷ்ணசாமி, சசிகலா கட்சி வேட்பாளர்கள்
தவெக வேட்பாளர்களிடம் தோல்வியடைந்த அமைச்சர்கள்: சபாநாயகர், துணை சபாநாயகரும் வீழ்ந்தனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in