தவெக வேட்பாளர்களிடம் தோல்வியடைந்த அமைச்சர்கள்: சபாநாயகர், துணை சபாநாயகரும் வீழ்ந்தனர்

தவெக வேட்பாளர்களிடம் தோல்வியடைந்த அமைச்சர்கள்: சபாநாயகர், துணை சபாநாயகரும் வீழ்ந்தனர்
Updated on
2 min read

சென்னை: ​தி​முக அரசின் அமைச்​சர​வை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் உட்பட 34 பேர் இடம் பெற்​றிருந்​தனர். இதில் மனோ தங்​க​ராஜ், கயல்​விழி செல்​வ​ராஜ் தவிர மீத​முள்ள 32 பேர் இந்த தேர்​தலில் போட்​டி​யிட்ட நிலை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உட்பட 14 பேர் தோல்​வியை தழு​வி​யுள்​ளனர்.

மூத்த அமைச்​சர் துரை​முரு​கன் (காட்​பாடி) 62,093 வாக்​கு​கள் மட்​டுமே பெற்று 3-வது இடத்தை பிடித்​தார். இந்த தொகு​தி​யில் தவெக வேட்​பாளர் சுதாகர் வெற்றி பெற்​றார். அமைச்​சர் முத்​து​சாமி (ஈரோடு மேற்​கு) 74,586 வாக்​கு​கள் பெற்று தவெக வேட்​பாளர் ஆனந்த மோக​னிடம் 22,250 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்​வி​யுற்​றார்.

அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் (ஆலந்​தூர்) 73,763 வாக்​கு​கள் பெற்று தவெக வேட்​பாளர் ஹரிஷிடம் 26,334 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்​வி​யுற்​றார். அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன் (காங்​கே​யம்) 59,230 வாக்​கு​கள் மட்​டுமே பெற்று 3-வது இடத்தை பிடித்​தார்.

இந்த தொகு​தி​யில் அதி​முக வேட்​பாளர் என்​எஸ்​என்.நட்​ராஜ் வெற்றி பெற்​றார். அமைச்​சர் ராஜேந்​திரன் (சேலம் வடக்​கு) 71,676 வாக்​கு​கள் பெற்று தவெக வேட்​பாளர் சிவகு​மாரிடம் 14,034 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்​வி​யுற்​றார்.

அமைச்​சர் மா.சுப்​பிரமணியன் (சை​தாப்​பேட்​டை) 52,691 வாக்​கு​கள் பெற்று தவெக வேட்​பாளர் அருள் பிர​காஷிடம் 28,514 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்​வி​யுற்​றார். அமைச்​சர் அன்​பில் மகேஷ் பொய்​யாமொழி (திரு​வெறும்​பூர்) 81,132 வாக்​கு​கள் பெற்று தவெக வேட்​பாளர் விஜயகு​மாரிடம் 8,705 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்​வி​யுற்​றார்.

அமைச்​சர் சா.​மு.​நாசர் (ஆவடி) 1,04,073 வாக்​கு​கள் பெற்று தவெக வேட்​பாளர் ரமேஷ்கு​மாரிடம் 76,311 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்​வி​யுற்​றார். அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா (மன்​னார்​குடி) 66,850 வாக்​கு​கள் பெற்று அமமுக வேட்​பாளர் காம​ராஜிடம் 1,566 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்​வி​யுற்​றார்.

அமைச்​சர் கீதாஜீவன் (தூத்​துக்​குடி) 62,805 வாக்​கு​கள் பெற்று தவெக வேட்​பாளர் நாத்​திடம் 37,731 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்​வி​யுற்​றார். அமைச்​சர் பி.டி.ஆர்​.பழனிவேல் தியாக​ராஜன் (மதுரை மத்​தி) 44,286 வாக்​கு​கள் பெற்று தவெக வேட்​பாளர் மதார் பதுரு​தினிடம் 19,128 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்​வி​யுற்​றார்.

அமைச்​சர் பி.மூர்த்தி (மதுரை கிழக்​கு) 1,02,230 வாக்​கு​கள் பெற்று தவெக வேட்​பாளர் கார்த்​தி​கேயனிடம் 16,547 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்​வி​யுற்​றார். அமைச்​சர் எம்​.ஆர்​.​காந்தி (ராணிப்​பேட்​டை) 85,362 வாக்​கு​கள் பெற்று தவெக வேட்​பாளர் தாஹி​ரா​விடம் 5,787 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்​வி​யுற்​றார்.

அமைச்​சர் மதிவேந்​தன் (ராசிபுரம்) 57,845 வாக்​கு​கள் பெற்று தவெக வேட்​பாளர் முன்​னாள் அதி​முக சபா​நாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்​செல்​வனிடம் 16,954 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்​வி​அடைந்தார்.

மேலும் சபா​நாயகர் அப்​பாவு (ரா​தாபுரம்) 57,634 வாக்​கு​கள் பெற்று தவெக வேட்​பாளர் சதீஷ் கிறிஸ்​டோபரிடம் 12,313 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்​வி​யுற்​றார். துணை சபா​நாயகர் பிச்​சாண்டி (கீழ்​பென்​னாத்​தூர்) 60,038 வாக்​கு​கள் பெற்று அதி​முக வேட்​பாளர் ராமசந்​திரன் 30,465 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்​வியுற்​றார்.

தவெக வேட்பாளர்களிடம் தோல்வியடைந்த அமைச்சர்கள்: சபாநாயகர், துணை சபாநாயகரும் வீழ்ந்தனர்
குறைந்த தொகுதிகள்... கூடுதல் வெற்றி: விசிக, தேமுதிகவை முந்திய கம்யூனிஸ்ட்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in