தேர்தலில் திமுகவை முற்றிலும் ஒழிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆவேசம்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் பயிலரங்கம் மற்றும் வழக்கறிஞர்கள் சந்திப்பு   நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசினார். படம்: எம்.முத்துகணேஷ்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் பயிலரங்கம் மற்றும் வழக்கறிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசினார். படம்: எம்.முத்துகணேஷ்

Updated on
1 min read

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுகவை முற்​றி​லு​மாக ஒழிக்க வேண்​டும் என்று மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜூ ஆவேச​மாகப் பேசி​னார்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், கூடு​வாஞ்​சேரி​யில் பாஜக சார்​பில் தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் குறித்த பயிலரங்​கம் மற்​றும் வழக்​கறிஞர்​கள் சந்​திப்பு நேற்று நடை​பெற்​றது. மத்​திய நாடாளு​மன்ற விவ​காரத்​துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜூ, தேர்​தல் பயிலரங்​கத்​தில் சிறப்​புரை​யாற்​றி​னார்.

அவர் பேசி​ய​தாவது: அருணாச்சல பிரதேசத்​தில் பெரும்​பாலும் பாஜக கட்​சியே ஆட்​சியை அமைத்து வரு​கிறது.அங்கே பாஜக பலமாக வளர்ந்து விட்​டது. நான் கல்​லூரி​யில் படித்து வந்த காலங்​களில் பாஜகவை இந்​துத்​துவா கட்​சி​யென்​றும் மதவாத கட்​சி​யென்​றும் இஸ்​லாமியர்​களுக்கு எதி​ரான கட்சி எனவும் காங்​கிரஸ் மற்​றும் கம்​யூனிஸ்ட் கட்​சி​யினர் பொது​மக்​களிடையே பெரும் அவதூறு பரப்பி வந்​தனர்.

அருணாச்சல பிரதேசத்​தில் கிராமம் கிராம​மாக, வீடு வீடாக சென்று பாஜக சார்​பில் நாங்​கள் காங்​கிரஸ் செய்த துரோகங்​களை, ஊழல்​களை எடுத்​துரைத்​தோம். தற்​போது அருணாச்சல பிரதேசத்​தில் காங்​கிரஸ் முற்​றி​லு​மாக இல்லை என்ற நிலை ஏற்​பட்​டுள்​ளது.

அதைப் போன்று தமிழகத்​தில் பாஜக​வினர் செயல்பட வேண்​டும். திமுக செய்த தவறுகளை​யும் ஊழல்​களை​யும் வீடு வீடாகச் சென்று மக்​களிடம் எடுத்​துச் சொல்ல வேண்​டும். அருணாச்சல பிரதேசத்​தில் காங்​கிரசை ஒழித்​தது போன்று தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுகவை முற்​றி​லு​மாக ஒழிக்க வேண்​டும். மொழி அரசி​யலை திமுக கையில் எடுத்து மத்​திய அரசுக்கு எதி​ராக பல்​வேறு பழிகளை சுமத்தி வரு​கிறது. திமுக அரசு ஊழல் செய்​வ​தில் முதன்​மை​யாக உள்​ளது.

தமிழகத்தை பொருத்​தவரை கலாச்​சா​ரம், உணவு முறை, தமிழர்​களின் வாழ்​வு​முறை மிக​வும் பிடித்​துள்​ளது. கல்​வி​யிலும் எல்​லாத் துறை​களி​லும் எங்கு சென்​றாலும் தமிழர்​கள் தனி முத்​திரை பதித்து வரு​கின்​றனர். எங்​கும் எதி​லும் முதன்​மை​யாக தமிழர்​கள் இருப்​பதை பார்ப்​ப​தற்கு மிக மகிழ்ச்​சி​யாக உள்​ளது. தமிழகத்​தின் முதன்​மை​யான தமிழ்​மறை திருக்​குறள். பிரதமர் நரேந்​திர மோடிக்கு திருக்​குறள் மிக​வும் பிடிக்​கும்.

தனது பல்​வேறு உரைகளி​லும் திருக்​குறளை அவர் மேற்​கோள் காட்​டிப் பேசு​வார். தமிழக மக்​களை திமுக வஞ்​சித்து வரு​கிறது. தேர்​தலில் திமுக தோற்​கடிக்​கப்பட வேண்​டும். தேசிய ஜனநாயகக் கூட்​டணி மீதும் பிரதமர் மோடி மீதும் தமிழக மக்​கள் நம்​பிக்கை வைத்​துள்​ளனர். தமிழகத்​தில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்​கும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

<div class="paragraphs"><p>செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் பயிலரங்கம் மற்றும் வழக்கறிஞர்கள் சந்திப்பு   நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசினார். படம்: எம்.முத்துகணேஷ்</p></div>
புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in