தமிழகத்துக்கு முழு நீர்ப்பங்கையும் தரத் தயார்: கேரள முதல்வர் வி.டி.சதீஷன் தகவல்

 கேரள முதல்வர் சதீஷன் - தமிழக முதல்வர் விஜய்

கேரள முதல்வர் சதீஷன் - தமிழக முதல்வர் விஜய்

Updated on
1 min read

சென்னை: தென்​மாநில முதல்வர்கள் மாநாடு தொடர்​பாக கேரள முதல்​வர் வி.டி. சதீஷன் வெளி​யிட்​டுள்ள எக்ஸ் தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: புதிய முல்​லைப் பெரி​யாறு அணை கட்​டப்​பட்​டால், தமி​ழ​கத்​துக்கு வழங்க வேண்​டிய முழு நீர்ப் பங்​கை​யும் வழங்க கேரளா தயா​ராக உள்​ளது. புதிய அணை​யின் வடிவ​மைப்​பு, இடத் தேர்வு மற்​றும் கட்​டு​மானப் பணி​களை தமி​ழ​கமே மேற்​கொள்​ளலாம்; அதற்​கான முழுச் செல​வை​யும் கேரளம் ஏற்​கும்.

தென் மாநிலங்​களுக்கு இடையி​லான ஒத்​துழைப்​பின் மூலம், விழிஞ்​ஞத்தை மைய​மாகக் கொண்டு கேரளாவை முன்​னணி துறை​முக நகர​மாக​வும், கடல்​சார் பொருளா​தார மைய​மாக​வும் மாற்​று​வதற்​கான நடவடிக்​கை​களை மேற்​கொள்ள வேண்​டும். நாடாளு​மன்​றத்​தில் பெண்​களுக்கு மூன்​றில் ஒரு பங்கு இடஒதுக்​கீட்டை அமல்​படுத்த வேண்​டும். அதேவேளை​யில், மொத்த உறுப்​பினர்​களின் எண்​ணிக்​கையை அதி​கரிக்​கக் கூடாது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p> கேரள முதல்வர் சதீஷன் - தமிழக முதல்வர் விஜய்</p></div>
தென் மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in