“தொகுதி மறுவரையறையை திமுக ஆதரித்தால் மோசமான முடிவை சந்திக்கும்” - கார்த்தி சிதம்பரம் எச்சரிக்கை

திருப்பத்தூரில் காங்கிரஸ் சார்பில் ‘லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்’ என்ற ஊழலுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம் எம்பி உள்ளிட்டோர்.

திருப்பத்தூரில் காங்கிரஸ் சார்பில் ‘லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்’ என்ற ஊழலுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம் எம்பி உள்ளிட்டோர்.

Updated on
2 min read

திருப்பத்தூர்: “தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் பாஜக அழுத்தத்துக்கு இணங்கிப்போனால், நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை விட, திமுக மோசமான முடிவை சந்திக்கும். பாஜக எதிர்ப்பு நிலையை மாற்றிக் கொண்டால் திமுகவுக்குதான் விபரீதம்” என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் எச்சரித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காங்கிரஸ் சார்பில் ‘லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்’ என்ற ஊழலுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கார்த்தி சிதம்பரம் எம்பி தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் சஞ்சய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய கார்த்தி சிதம்பரம், “தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறினால், இந்தி பேசும் மாநிலங்களை மையமாக வைத்தே அரசியல் நடக்கும்.

இந்த மசோதாவை ஆதரிக்க திமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கு ஒப்புக்கொண்டால், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 5 ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை. ஒரே நாடு; ஒரே தேர்தல் மூலம் 2029-ம் ஆண்டிலேயே சட்டப்பேரவை தேர்தலும் வந்துவிடும் என்று பாஜகவினர் ஆசை காட்டுகின்றனர்.

இதற்கு இணங்கிப்போனால், நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை விட, திமுக மோசமான முடிவை சந்திக்கும். பாஜக எதிர்ப்பு நிலையை மாற்றிக் கொண்டால் திமுகவுக்கு தான் விபரீதம்.

தமிழகத்தில் தவெக கூட்டணி வலுவாக உள்ளது. ஊழலை செயல்திறன், வெளிப்படைத் தன்மை மூலமாக தான் ஒழிக்க முடியும். தவெகவுக்கு பெரும்பான்மை உள்ளது. கூட்டணிg கட்சிகளும் வெளியேற வாய்ப்பில்லை. அதனால், புது கட்சிகளையோ, எம்எல்ஏக்களையோ சேர்க்கத் தேவையில்லை.

நவோதயா பள்ளி வந்தால் இந்தி கட்டாயமாக்கப்படும் என்ற அச்சம் உள்ளது. பள்ளி திறந்த பின்னர் தமிழ் கற்றுக் கொடுக்க எங்களுக்கு ஆசை தான். ஆனால், ஆசிரியர்கள் இல்லை என்று சொல்லலாம்.

பின்பு மாநில அரசு நடத்தும் பள்ளிகளிலும் மும்மொழிக் கொள்கையை ஒப்புக்கொண்டால் தான் நிதி ஒதுக்குவோம் என்று சொல்வர்களோ என்ற அச்சம் உள்ளது.

கூட்டணிக் கட்சியிலிருந்து யாராவது வந்தால் எங்கள் கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று கடந்த முறை திமுக முடிவு எடுத்தது. அதுபோல தவெகவும் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

ஒரு மாவட்டத்தில் மாதத்துக்கு 2,000 பேரை நாய் கடிக்கிறது. அது ஆயிரமாக குறையுமா என்று தான் பார்க்க வேண்டும். அதைவிடுத்து ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது.

நாம் தமிழர் கட்சி தனியாக ‘பேட்டிங்’ செய்து எத்தனை நாள் தான் தோற்றுப் போவது. யாருடனாவது சேர்ந்து ‘பேட்டிங்’ செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு ஆசை வந்துள்ளது. அதை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, 6 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும் என்று முன்னாள் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் கூறியது குறித்த கேள்விக்கு, “அரசியல் சாசனத்திலும், சட்டத்திலும் கற்பனைக்கு தடை இல்லை; எல்லையும் இல்லை. கலர், கலராக கனவுகள் காணலாம்” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>திருப்பத்தூரில் காங்கிரஸ் சார்பில் ‘லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்’ என்ற ஊழலுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம் எம்பி உள்ளிட்டோர்.</p></div>
‘The Odyssey’ விமர்சனம்: திரைக் காவியமா, தேறாத பிரம்மாண்டமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in