ஜனநாயகத்தை காக்க ஒன்றுபட வேண்டியது கட்டாயம்: ஈரோடு பிரச்சாரத்தில் கர்நாடக துணை முதல்வர் கருத்து

ஜனநாயகத்தை காக்க ஒன்றுபட வேண்டியது கட்டாயம்: ஈரோடு பிரச்சாரத்தில் கர்நாடக துணை முதல்வர் கருத்து
Updated on
1 min read

ஈரோடு: ஜன​நாயகத்தை காக்க நாம் ஒன்​று பட​வேண்​டிய கட்​டா​யத்​தில் உள்​ளோம் என கர்நாடக மாநில துணை முதல்​வர் டி.கே.சிவக்குமார் பேசி​னார்.

ஈரோடு சம்​பத் நகரில் கிழக்கு தொகுதி காங்​கிரஸ் வேட்​பாளர் கோபி​நாத் பழனியப்​பனை ஆதரித்​து, அவர் மேலும் பேசி​ய​தாவது: ஜனநாயகத்தை காக்க நாம் ஒன்​று​ பட​வேண்​டிய கட்​டா​யத்​தில் உள்​ளோம்.

திமுக, காங்​கிரஸ் இண்​டியா கூட்​டணி ஒன்​று​பட்​டால் தான் இந்​தி​யா​வில் நல்​லாட்​சி​யும் அமைதி நில​வும். பாஜக இந்​தி​யா​வில் வேற்​றுமையை உரு​வாக்க முயற்​சிக்​கிறது. இதற்கு நாம் வழி​வகுக்​கக் ​கூ​டாது.

இந்​திய தேசத்​தின் கட்​டமைப்​பில் தமிழகம் மற்​றும் கர்​நாடகா முக்​கிய பங்​காற்​றுகிறது. இதில், தமிழகம் 2-வது முக்​கிய​மாக பங்​களிக்​கிறது. கடந்த ஐந்​தாண்​டு​களாக நலத்​திட்ட உதவி​களை முதல்​வர் திறம்பட செயல்​படுத்​தி​யுள்​ளார்.

தற்​போது தொடங்​கப்​பட்​டுள்ள புதிய கட்​சிகள் என்ன செய்ய போகிறார்​கள், அவர்​களின் கொள்​கைகள் தெரி​யாது. தற்​போது உள்ள திமுக காங்​கிரஸ் கூட்​டணி மக்​களுக்​கான கூட்​ட​ணி. இளைஞர்​கள், மகளிருக்கு உங்​கள் தலை​வர்​களை திரை​யில் தேடாதீர்​கள் என வேண்​டு​கோள் வைக்​கிறேன். இவ்​வாறு பேசி​னார்​.

ஜனநாயகத்தை காக்க ஒன்றுபட வேண்டியது கட்டாயம்: ஈரோடு பிரச்சாரத்தில் கர்நாடக துணை முதல்வர் கருத்து
கோவை, பல்லடத்தில் ஆவணமில்லாத ரூ.13 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in