“இம்முறை எங்கள் தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்” - கனிமொழி கருத்து

“இம்முறை எங்கள் தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்” - கனிமொழி கருத்து
Updated on
1 min read

ஏற்​கெனவே நடைபெற்ற தேர்தல்​களின்போது திமுக-வின் தேர்தல் அறிக்கை தேர்தலின் கதாநாயகன் என்று அழைக்​கப்​பட்டது. இந்த முறை திமுக-வின் தேர்தல் அறிக்கை கதாநாயகி​யாகவும் இருக்கும் என திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவரான கனிமொழி எம்.பி தெரிவித்​தார்.

தஞ்சாவூரில் நேற்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. குழுவின் தலைவரான கனிமொழி எம்.பி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அமைச்​சர்கள் கோவி.செழியன், டி.ஆர்​.பி.ராஜா மற்றும் குழுவின் உறுப்​பினர்கள் பங்கேற்​றனர்.

கூட்டத்​தில், விவசா​யிகள், வணிகர்கள், மீனவர்கள், பொது​மக்கள் என பலரும் தங்களது கோரிக்​கைகளை தெரிவித்து, மனுக்​களையும் அளித்​தனர். கூட்டத்​துக்குப் பின்னர், செய்தி​யாளர்​களிடம் பேசிய கனிமொழி கூறிய​தாது:

சட்டப்​பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கையை தயாரிப்​ப​தற்காக, மண்டலங்கள் தோறும் சென்று அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து, கருத்​துகளைக் கேட்டறிந்து வருகி​றோம். இதன்மூலம், திமுக தேர்தல் அறிக்கையை மக்களின் தேர்தல் அறிக்​கையாக உருவாக்கும் வேலைகளைச் செய்து வருகி​றோம்.

அதிமுக வெளியிட்​டுள்ள தேர்தல் வாக்குறு​திகள் நிறைவேறாது என மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஆனால், திமுக-வின் தேர்தல் அறிக்​கையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்​கி​றார்கள். நாங்கள் வாக்குறுதி கொடுத்​தால், அதை நிறைவேற்​றுவோம் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதுமட்​டுமில்​லாமல், அடுத்து ஆட்சிக்கு வரப்போவதும் நாங்கள் தான். அதனால் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றப் போவதும் நாங்கள் தான்.

கடந்த தேர்தல்​களில் திமுக-வின் தேர்தல் அறிக்கை தான் தேர்தலின் கதாநாயகன் என்று அழைக்​கப்​பட்டது. இந்த முறை தேர்தல் அறிக்கை கதாநாயகி​யாகவும் இருக்​கும். மத்தியில் ஆட்சி மாற்றம் வரும்​போது, நீட் தேர்வில் மாற்றத்தை கொண்டு வர முடியும். அதுவரை நீதிமன்​றத்​தைத்தான் நாட வேண்டும். தமிழகத்தில் மதுக்​கடைகள் படிப்​படியாக மூடப்​பட்டு வருகின்றன. தொடர்ந்து மதுக் கடைகள் மூடப்​படும். தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாடு அதிகளவிலான பெண்கள் திமுக பக்கம் இருக்​கி​றார்கள் என்​பதைத் தெளி​வாகக் காட்​டு​கிறது. இவ்வாறு அவர் தெரி​வித்​தார்​.

“இம்முறை எங்கள் தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்” - கனிமொழி கருத்து
234 தொகுதிகள்... 20 நட்சத்திரப் பேச்சாளர்கள் - ஒரு மாத பரப்புரைக்குத் தயாராகும் திமுக

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in