தேர்​தலில் மநீம போட்​டி​யில்லை: கமல்​ஹாசன் அறி​விப்பு

தேர்​தலில் மநீம போட்​டி​யில்லை: கமல்​ஹாசன் அறி​விப்பு
Updated on
1 min read

உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட வேண்​டும் என்ற பரிந்துரை ஏற்​புடையதாக இல்​லாத​தால் சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட​வில்லை மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன் அறி​வித்​துள்​ளார்.

திமுக கூட்​ட​ணி​யில் அங்​கம் வகித்து வரும் மநீம தொகுதி பங்​கீடு தொடர்​பாக திமுக தொகுதி பங்​கீட்டு குழு​விடம் 2 கட்​டங்​களாக பேச்​சு​வார்த்தை நடத்​தி​யது. இது தொடர்​பாக கட்சி நிர்​வாகி​களு​டன் கமல்​ஹாசன் ஏற்​கெனவே ஆலோ​சனை நடத்​தி​னார்.

இந்​நிலை​யில் கமல்​ஹாசன் மநீம கட்​சி​யின் மாநில நிர்​வாகி​களு​டன் நேற்று இரவு 8 மணி அளவில் அண்ணா அறி​வால​யத்​தில் திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினை சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது தேர்​தலில் போட்​டி​யி​டா​மல் திமுக​வுக்கு ஆதரவு அளிப்​பது என்ற கட்​சி​யின் முடிவை ஸ்டா​லினிடம் கமல்​ஹாசன் தெரி​வித்​தார். பின்​னர், கமல்​ஹாசன் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

நமக்கு தரு​வ​தாக சொல்​லி​யிருக்​கும் தொகு​தி​களின் எண்​ணிக்​கை​யும், உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட லேண்​டும் என்ற பரிந்​துரை​யும் கட்சி உறுப்​பினர்​களுக்​கும் எனக்​கும் ஏற்​புடைய​தாக இல்​லை. டார்ச் லைட் சின்​னத்​துட​னான கட்சி தொண்​டர்​களின் பிணைப்பு உணர்​வுபூர்​வ​மானது. இந்த சின்​னம் வெறும் சின்​னம் அல்ல. அது எங்​களின் அடை​யாளம். ஆகவே, இந்த தேர்​தலில் நாங்​கள் போட்​டி​யிட​வில்​லை. திமுக கூட்​ட​ணிக்கு நிபந்​தனை இன்றி ஆதரவு அளிப்​போம்” என்று கூறி​யுள்​ளார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கமல்​ஹாசன் கூறுகை​யில், “தேர்​தலில் போட்​டி​யிட​வில்லை என்​பதை எங்​கள் கட்சி நிர்​வாகி​களு​டன் கலந்து ஆலோ​சித்து முடிவு எடுத்​துள்​ளோம். திமுக ஆட்சி தொடர வேண்​டும். திமுக​வுடன் நிற்​பதை கடமை​யாக கருதுகிறேன். இது தியாகம் இல்​லை, கடமை. திமுக​வுக்கு முழு​மை​யான அழுத்​த​மான ஆதரவு அளிப்​போம்” என்​றார்.

ஸ்டா​லின் நெகிழ்ச்சி: இதற்​கிடையே, முதல்​வர் ஸ்டா​லின் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், ‘தேர்​தலில் போட்​டி​யி​டா​மல் திமுக​வுக்கு ஆதரவு அளிப்​பது தியாகம் அல்ல, கடமை என்று கமல் கூறி​னார். உண்​மை​யில் அவர் செய்​திருப்​பது தியாகம் தான். கமலுக்கு எப்​படி நன்றி சொல்​வது என்று தெரிய​வில்​லை. அவரது முடிவு என்னை நெகிழ வைத்​து​விட்​டது. தமி​ழ​கம் முழு​வதும் கமல் வலம் வரவேண்​டும். அமை​யும் திரா​விட மாடல் 2.0 அரசு அவரது அன்​பி​னால் ஆனது” என்று தெரி​வித்​துள்​ளார்.

தேர்​தலில் மநீம போட்​டி​யில்லை: கமல்​ஹாசன் அறி​விப்பு
தேமுதிக 10, விசிக-வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு: ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in