“பாஜகவின் கொள்கைகளை எதிர்ப்பதில் தவெக அரசு உறுதி” - காதர் மொகிதீன்

“பாஜகவின் கொள்கைகளை எதிர்ப்பதில் தவெக அரசு உறுதி” - காதர் மொகிதீன்

படம்: ர.செல்வமுத்துகுமார்

Updated on: 
1 min read

திருச்சி: “பாஜகவின் கொள்கைகளை எதிர்ப்பதில் தவெக அரசு உறுதியாக உள்ளது” என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் (ஐயுஎம்எல்) தேசிய தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நவ.14-ம் தேதி சமயபுரம் பகுதியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுக்கான இலச்சினை (லோகோ) வெளியிடும் நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் கூறியது:

“தவெக அரசு பள்ளிவாசல்கள் மேம்பாட்டுக்கு வட்டியில்லா கடனாக ரூ.100 கோடி வழங்கிய பெருமையை கொண்டுள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒடுக்க காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னையில் 2 பள்ளி வாசல்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றதாக தெரிகிறது. அந்தச் செயலை செய்தவர்ளை போலீஸார் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த பிரச்சினை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் கொள்கை எதிர்ப்பில் தவெக அரசு உறுதியாக உள்ளது. மேலும், தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசின் சில முன்னெடுப்புகளை பாராட்டவும், தேவைப்படும்போது எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது” என்று அவர் தெரிவித்தார். அப்போது, சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ஷாஜகான் உட்பட பலர் உடன் இருந்தனர்.

“பாஜகவின் கொள்கைகளை எதிர்ப்பதில் தவெக அரசு உறுதி” - காதர் மொகிதீன்
முதல்வர் விஜய் நவ.14-ல் அம்பாசமுத்திரம் பயணம்? - சூடுபிடிக்கிறது இடைத்தேர்தல் களம்

X