ஆலங்குளம் தாக்குதலில் ஈடுபட்டோர் விவரத்தை தெரிவிக்காதது ஏன் ? - ஜான் பாண்டியன்

ஜான் பாண்டியன்

ஜான் பாண்டியன்

Updated on
1 min read

ஆலங்குளம் அருகே நெட்டுரில் நேற்று முனதினம் மாலையில் திருமண விருந்து நிகழ்ச்சியில் புகுந்து 6 பேரை மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர ஜான் பாண்டியன் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நெட்டுரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாகவே தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல், தற்போது ஏற்பட்ட சம்பவத்திலும் ஊர் மக்கள் சென்று புகார் அளித்துள்ளனர். ஆனால், உதவி ஆய்வாளர் சுபாஸ் சந்திரபோஸ் புகாரை பெறவில்லை.

இந்த சம்பவத்துக்கு முழுமையான காரணம் காவல்துறையின் அஜாக்கிரதைதான். முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. எதிர் தரப்பினரிடம் பணம் வாங்கிக்கொண்டு சமாதானம் பேசிய தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இப்போது பொது மக்களை அழைத்துச் சென்று குற்றவாளிகளை கைது செய்யக்கோரி புகார் அளிக்க இருக்கிறேன். புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போராட்டம் நடத்தும். கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை காவல்துறை தெரிவிக்கவில்லை. உண்மையான குற்றவாளிகளை கைது செய்துள்ளார்களா என்பது தெரியவில்லை.

கைது செய்யப்பட்ட 8 பேரும் உண்மையான குற்றவாளிகளா என்ற சந்தேகம் மக்களிடம் உள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் பெயர், புகைப்படம் போன்ற எந்த விவரத்தையும் காவல்துறை தெரிவிக்கவில்லை. கைதானவர்களின் பெயர் விவரங்களை தெரிவிக்காதது ஏன் ?.

நெட்டூரில் காலையில் இருந்து தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் ஏன் பாதுகாப்பு அளிக்கவில்லை. ஜாகி வன்மத்தோடு மக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த 3 மாதமாக புகார்கள் வந்தும் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் சில அதிகாரிகள் செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இனிமேல் இதுபோல் எந்த நிகழ்வுகளும் நடக்காமல் தடுக்க காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

<div class="paragraphs"><p><em>ஜான் பாண்டியன்</em></p></div>
கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தட மின்சார ரயில் இயக்கத்தில் புதிய கால அட்டவணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in