தேர்தல் ரீவைண்ட்: 2014-ல் தனித்து நின்று கெத்து காட்டிய ஜெயலலிதா!

தேர்தல் ரீவைண்ட்: 2014-ல் தனித்து நின்று கெத்து காட்டிய ஜெயலலிதா!
Updated on
1 min read

1972-ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி, அவரது மறைவு வரை சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களை கூட்டணி அமைத்தே சந்தித்தார். அவருக்கு பின் அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா பதவியேற்ற பிறகும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டு வந்தார்.

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவர் தனித்து போட்டி என்ற அதிரடியான முடிவை எடுத்து, தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதி களிலும் வேட்பாளர்களை களம் இறக்கினார். அப்போது, தமிழகம் முழுவதும் அவர் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது மோடியா? அல்லது இந்த லேடியா? என்று அவர் வீசிய வார்த்தை அகில இந்திய அளவில் எதிரொலித்தது.

அந்தத் தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று, இந்தியாவின் 3-வது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தை அலங்கரித்தது.

அந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமகவின் அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியிலும், பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதுச்சேரியில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று, அங்கு மாநிலக் கட்சியில் இருந்து நாடாளு மன்றத்துக்கு தேர்ந் தெடுக்கப்பட்ட முதல் எம்.பி.யானார்.

தேர்தல் ரீவைண்ட்: 2014-ல் தனித்து நின்று கெத்து காட்டிய ஜெயலலிதா!
விருதுநகர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in