மனிதநேய மக்கள் கட்சி தலைவராக ஜவாஹிருல்லா மீண்டும் தேர்வு

ஜவாஹிருல்லா | கோப்புப் படம்
ஜவாஹிருல்லா | கோப்புப் படம்
Updated on: 
1 min read

கோவை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், கோவை ஈச்சனாரியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் இரு அமைப்புகளின் ஒருங்கிணைந்த மாநிலத் தலைவராக ஜவாஹிருல்லா மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மமக பொதுச் செயலாளராக அப்துல் சமத், பொருளாளராக கோவை உமர், தமுமுக பொதுச் செயலாளராக பேராசிரியர் ஹாஜா கனி, பொருளாளராக பொறியாளர் சபீ உல்லா கான் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறும்போது, “பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் முஸ்லிம்களுக்கான மூன்றரை சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர தமிழக அரசு சட்டப்பேரவையைக் கூட்டி, நடவடிக்கை எடுக்க வேண்டும். 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள 18 முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பரோல் வழங்குவதற்கு பதிலாக, நிரந்தர விடுதலை வழங்க வேண்டும்.

இந்த இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 17-ம் தேதி தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். இதில், தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்போம்” என்றார். ஜவாஹிருல்லா மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

ஜவாஹிருல்லா | கோப்புப் படம்
சென்னை, திருச்சி, கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: 6 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in