ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை

சென்னை, புதுச்சேரியில் 15 இடங்களில் நடைபெற்றது
ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக்
Updated on
1 min read

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்​புடைய சென்​னை, புதுச்​சேரி​யில் உள்ள 15 இடங்​களில் வரு​மான வரித் துறை சோதனை நடை​பெற்​றது. சோதனை​யில் முக்​கிய ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு, வாக்​காளர்​களுக்​கு பணப்​பட்​டு​வாடா செய்​யப்​படு​வதைத் தடுக்க தேர்​தல் பறக்​கும் படை​யினர் மாநிலம் முழு​வதும் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், சர்​வ​தேச போதைப் பொருள் கடத்​தல் வழக்​கில் கைதாகி தற்​போது ஜாமீனில் இருக்​கும் முன்​னாள் திமுக நிர்​வாகி ஜாபர் சாதிக்​குக்​கு சொந்​த​மான இடங்​களில் வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் நேற்று அதிரடி சோதனை​ நடத்தினர்.

கடந்த 2024-ம் ஆண்​டு, ஆஸ்​திரேலியா மற்​றும் நியூசிலாந்து நாடு​களுக்கு போதைப் பொருளைக் கடத்​திய புகாரில், போதைப் பொருள் கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தால் ஜாபர் சாதிக் கைது செய்​யப்​பட்​டார். டெல்லி திகார் சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த இவர் மீது, சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் தொடர்​பாக அமலாக்​கத் துறை​யும் வழக்​குப் பதிவு செய்து தீவிர விசா​ரணை நடத்தி வரு​கிறது.

தற்​போது ஜாமீனில் வெளிவந்​துள்ள ஜாபர் சாதிக், பெரு​மள​வில் வரி ஏய்ப்பு செய்​திருப்​ப​தாக வரு​மான வரித் துறைக்கு ரகசி​யத் தகவல் கிடைத்​த​தாக கூறப்​படு​கிறது. அந்​தப் புதிய தகவல்​களின் அடிப்​படை​யில், தேர்​தல் பறக்​கும் படை​யினருடன் இணைந்து வரு​மான வரித் துறை இந்த நடவடிக்​கையை மேற்​கொண்​டுள்​ளது.

100-க்​கும் மேற்​பட்ட அதி​காரி​கள் சென்னை மற்​றும் புதுச்​சேரி​யில் உள்ள 15 இடங்​களில் ஒரே நேரத்​தில் சோதனை​யில் ஈடு​பட்​டனர். சென்​னை​யில் எழும்​பூர், கீழ்ப்​பாக்​கம், அண்ணா சாலை, புரசை​வாக்​கம் ஆகிய பகு​தி​களில் ஜாபர் சாதிக் தொடர்​புடைய இடங்​களில் சோதனை நடந்​தது. குறிப்​பாக, பட்​டினப்​பாக்​கத்​தில் உள்ள ஜாபர் சாதிக்​கின் வீடு, எழும்​பூர் மற்​றும் அண்ணா சாலை​யில் உள்ள ஜெ.எஸ்​.எம். விடுதி ஆகிய​வற்​றில் அதி​காரி​கள் பல மணி நேரம் சோதனை​யிட்​டனர். இதே​போல் புதுச்​சேரி​யில் அவருக்​குத் தொடர்​புடைய இடங்​களி​லும் அதி​காரி​கள் சோதனையில் ஈடுபட்டனர்.

தேர்​தல் நடத்தை விதி​கள் அமலில் இருப்​ப​தால், வாக்​காளர்​களுக்கு விநி​யோகம் செய்​வதற்​காக பணம் ஏதேனும் பதுக்கி வைக்​கப்​பட்​டுள்​ளதா என்ற கோணத்​தி​லும் அதி​காரி​கள் தீவிர​மாக ஆய்வு நடத்​தினர். வரி ஏய்ப்பு தொடர்​பான புதிய ஆதா​ரங்​கள் சிக்​கிய​தால் இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​ட​தாக​வும், சோதனை​யில் கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள் குறித்து இப்​போதைக்​கு கருத்து தெரிவிக்க முடி​யாது என்​றும் வரு​மான வரித் துறை​யினர் தெரி​வித்​தனர்.

ஜாபர் சாதிக்
எடப்பாடி பழனிசாமி சொத்து மதிப்பு என்ன? - வேட்புமனுவில் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in