எடப்பாடி பழனிசாமி சொத்து மதிப்பு என்ன? - வேட்புமனுவில் தகவல்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

Updated on
1 min read

மேட்டூர்: அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமிக்கு கடந்த ஆண்டு ரூ.11.07 லட்சம் வருமானம் காட்டியுள்ளார். மேலும், அசையும் சொத்துகள் ரூ.50.86 லட்சம், கடனாக ரூ.17 லட்சம் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பழனிசாமி, வேட்புமனுத் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளதாவது: பழனிசாமி தனது கையிருப்பில் ரூ.50,000, மனைவி ராதா கையிருப்பில் ரூ.1,00,000 இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல், தன்னிடம் 100 கிராம் தங்க நகைகள், மனைவி ராதாவிடம் 720 கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மொத்தமாக அசையும் சொத்துகளாக பழனிசாமியிடம் ரூ 50.86 லட்சமும், அவரது மனைவிடம் ரூ 2.16 கோடியும் உள்ளன.

பழனிசாமி பெயரில் எந்தவித அசையா சொத்துகளும் இல்லை, வாகனங்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி பெயரில் ரூ.3.45 கோடி அசையா சொத்துகள் உள்ளன. மொத்தமாக பழனிசாமி பெயரில் பழனிசாமியிடம் ரூ.50.86 லட்சம் அசையும் சொத்துகள் உள்ளன. மேலும், அவருக்கு ரூ.17 லட்சம் கடன் உள்ளது எனவும், அவரது பெயரில் 5 குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இதனிடையே, கடந்த 2024-25-ம் ஆண்டு வருமானமாக பழனிசாமிக்கு ரூ.11.07 லட்சம் எனவும், அவரது மனைவிக்கு ரூ.12.25 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரமாண பத்திரத்தில், அவரது மகன் பெயர் மற்றும் சொத்து விவரங்கள் இடம் பெறவில்லை.

<div class="paragraphs"><p>எடப்பாடி பழனிசாமி</p></div>
“டெல்லி ரிமோட் கன்ட்ரோலுக்கு எதிரான உணர்வுதான் புதுச்சேரியிலும் உள்ளது” - மு.க.ஸ்டாலின் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in