“ஆண்டுதோறும் 50 ராக்கெட் ஏவுவதற்கு இலக்கு”- இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல்

இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் | கோப்புப் படம்

இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் | கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தில் பட்​டமளிப்பு விழா நேற்று நடந்​தது.

இந்த விழா​வில் பங்​கேற்ற இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறுவனத்​தின் (இஸ்ரோ) தலை​வர் வி.நாராயணன், செவி​லியர், மருத்​துவ ஆராய்ச்சி, உயிரி மருத்​து​வம் மற்​றும் தொழில்​நுட்​பத்​துறை, கேட்​பியல் மற்​றும் பேச்சு மொழித்​துறை, செயல்​முறை மருத்​து​வம் மற்​றும் சமூக அறி​வியல் துறை​யில் 455 மாணவர்களுக்கு பட்​டங்​களை வழங்​கினார்.

விழா​வில், ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறுவனத்​தின் வேந்​தர் வி.ஆர்.வெங்​கடாசலம், இணைவேந்​தர் ஆர்.வி.செங்​குட்​டுவன், மருத்​துவ கல்​லூரி தலை​வர் மருத்​து​வர் கே.பாலாஜி சிங், பதிவாளர் மருத்​து​வர் எஸ்.செந்​தில் ​குமார், ஆய்வுத் ​துறை தலை​வர் மருத்​து​வர் பி. வெங்​கடாசலம், தேர்​வு​கள் கண்​காணிப்​பாளர் மருத்​து​வர் ஆர்.பத்​மாவதி, நிதித்​துறை இயக்குனர் ஜே.ரவிசங்​கர் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

விழா​வில், இஸ்ரோ தலை​வர் வி.நாராயணன் பேசிய​தாவது: “உலகளாவிய விண்​வெளி வணிகத்​தில், இந்​தி​யாவின் வரு​வாயை 10 சதவீதம் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்​ணயிக்​கப்​பட்​டுள்​ளது. இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க மனித விண்வெளி பயண திட்டமான ககன்யான் திட்டத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆண்​டுக்கு 50 ராக்​கெட்​டுகளை ஏவும் இலக்கை இந்​தியா அடைவதற்கு, ஏவுதள உள்​கட்​டமைப்பு மற்​றும் ராக்​கெட் தயாரிக்​கும் தொழில்​நுட்​பம் ஆகிய​வற்​றில் தனியார் பங்​களிப்​புடன் விண்​வெளித்​துறையை பலப்​படுத்த முடியும். தமிழகத்​தில் புதிய ஏவுதள உள்​கட்​டமைப்பு குலசேகரபட்டினத்தில் தயாராகி வரு​கிறது.

<div class="paragraphs"><p>இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் | கோப்புப் படம்</p></div>
4,900 மெகாவாட் கொள்முதல் செய்ய டெண்டர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in